நரை முடியை கருப்பாக மாற்ற
நம் முன்னோர்களின் காலத்தில் வயதானால் கூட முடி உதிராமலும், நரை முடி ஏற்படாமலும் இருந்தனர். ஆனால் இன்றைய கால கட்டத்தில் இளம் வயதினருக்கே நரை முடி பிரச்சனை ஏற்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் சரியான உணவு முறை இல்லாமல் இருப்பது, மன அழுத்தம், தூக்கமின்மை போன்ற பிரச்சனைகளால் நரை முடி பிரச்சனை ஏற்படுகிறது. இதனை தவிர்ப்பதற்காக கடையில் விற்கும் கெமிக்கல் நிறைந்த டையை வாங்கி பயன்படுத்துகின்றனர். இதனை பயன்படுத்திய இரண்டு நாட்களுக்கு மட்டும் தான் கருப்பாக காட்சியளிக்கும். நாளடைவில் முடி வெள்ளையாக மாறிவிடும். அதனால் இயற்கையான முறையில் வீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தி நரை முடியை கருப்பாக மாற்றுவது எப்படி என்று தெரிந்து கொள்வோம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
மருதாணி டை தயாரிக்க தேவையான பொருட்கள்:
ஆம்லா- 3 தேக்கரண்டி
மருதாணி- ஒரு கப்
காபி தூள்- 1 தேக்கரண்டி
டை செய்முறை:
ஒரு கப் மருதாணி இலைகளை பேஸ்ட்டாக அரைத்து கொள்ளவும். இதனுடன் நெல்லிக்காய் பவுடர் 2 தேக்கரண்டி, காபி தூள் 1 தேக்கரண்டி சேர்த்து மிக்ஸ் செய்து கொள்ளவும். ரொம்ப கெட்டியாக இருந்தால் சிறிதளவு தண்ணீர் ஊற்றி மிக்ஸ் செய்து கொள்ளவும்.
பயன்படுத்தும் முறை:
செய்து வைத்துள்ள டையை கையில் கையுறை அணிந்து கொண்டு தலை முடி முழுவதும் அப்ளை செய்யவும். இதனை 1 மணி நேர அப்படியே வைக்க வைக்கவும். பிறகு சல்பேட் இல்லாத ஷாம்புவை பயன்படுத்தி தலையை தேய்த்து அலசி கொள்ளவும்.
ஒரே வாரத்தில் கொட்டிய இடத்தில் எல்லாம் புதிய முடி வளர இதை மட்டும் ட்ரை பண்ணுங்க..!
பீட்ரூட் டை தயாரிக்க தேவையான பொருட்கள்:
பீட்ரூட் மெலனை சரியாக வைத்து கொள்ள உதவுகிறது. அதனால் உங்களுக்கு நரைமுடி பிரச்சனை அதிகமாக இருந்தால் பீட்ரூட் சிறந்த தேர்வாக இருக்கும்.
- பீட்ரூட் சாறு – ஒரு கப்
- பாதாம் எண்ணெய்- 6 தேக்கரண்டி
டை செய்முறை:
ஒரு பவுலை எடுத்து அதில் ஒரு கப் பீட்ரூட் சாறு, 6 தேக்கரண்டி பாதாம் எண்ணெய் சேர்த்து கலந்து கொள்ளவும்.
இந்த பேக்கை தலை முடி முழுவதும் தடவி ஒரு மணி நேரம் வைத்திருக்க வேண்டும். பிறகு நீங்கள் எப்பொழுதும் பயன்படுத்தும் ஷாம்பை கொண்டு அலச வேண்டும்.
மேல் கூறப்பட்டுள்ள பேக்கில் ஏதாவது ஒன்றை வாரத்தில் ஒரு நாள் என்று தொடர்ந்து செய்து வந்தால் நரை முடி கருமையாக மாறிவிடும்.
தேங்காய் எண்ணெயில் இந்த பொருளை கலந்து தலையில் தடவி பாருங்க..
இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | இயற்கை அழகு குறிப்புகள் |