பீட்ருட் நன்மைகள்
வணக்கம் நண்பர்களே இன்று உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமான பீட்ருட்டின் நன்மைகள் பற்றி தெரிந்துகொள்ள போகிறோம். பொதுவாக பீட்ருட்டை அதிகம் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவதில்லை. காய்கறிகள் என்று எடுத்துக்கொண்டாலே உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் கிடைக்கூடிய ஒன்று. இன்றைய தலைமுறையினர் பெரும்பாலும் உடலுக்கு சத்து தரக்கூடிய உணவுகளை எடுத்துக்கொள்ளாமல் வெளியில் வாங்கி உண்பதையே விரும்புகிறார்கள். வீட்டில் இருக்கக்கூடிய பெரியவர்கள் காய்கறிகளை எவ்வளவு ருசியாக சமைத்து கொடுத்தாலும் அதை வீட்டில் இருக்கக்கூடிய சின்னஞ் சிறுசுங்களுக்கு பிடிக்காது. அதிலும் பீட்ருட் பொரியல் செய்து வைத்தால் அறவே சாப்பிட மாட்டார்கள். நாம் எதை ஒதுக்கி வைத்து சாப்பிடுகிறோமா அதில்தான் அதிகளவு சத்து நிறைந்து கிடக்கிறது. பீட்ருட் சாப்பிடுவதால் உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது என்று தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
பீட்ரூட்டின் நன்மைகள்:
பீட்ரூட்டில் ஏராளமான வைட்டமின்களும் தாதுக்களும் நிறைந்துள்ளன. மேலும் இதில் உள்ள நைட்ரிக் ஆக்சைடு இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். பீட்ரூட்டை தினமும் சாப்பிட்டு வர உடல் வலிமை அதிகரிக்கும். இது உங்களை நீண்ட நேரத்திற்கு சோர்வடையாமல் வைத்திருக்கும்.
மறதியை தடுக்கும்:
பீட்ரூட் சாப்பிடுவது மூளையின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உங்கள் ஞாபக சக்தியை அதிகரிக்க உதவுகின்றன. இதன் மூலம் அடிக்கடி ஏற்படும் மறதியை தடுக்கலாம்.
பிறப்பு குறைபாடுகளின் ஆபத்து குறையும்:
கர்ப்பிணி பெண்கள் மற்றும் வயிற்றில் வளரும் சிசுவிற்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் யாவும் பீட்ரூட்டில் நிறைந்துள்ளன. இது வயிற்றில் வளரும் குழந்தைகளுக்கு ஏற்படும் பிறவி குறைபாடுகளின் ஆபத்தை குறைக்கும்.
கண்களை சுற்றி இருக்கும் கருவளையத்தை போக்க பாட்டி சொன்ன வீட்டு வைத்தியம்….
எலும்புகளை வலுப்படுத்தும்:
உடலில் கால்சியம் சத்துக்கள் குறைவதால் எலும்புகள் பலவீனம் அடையலாம். பெரும்பாலான பெண்களும் கால்சியம் பற்றாக்குறையினால் அவதிப்படுகிறார்கள், இந்நிலையில் கால்சியம் குறைப்பாட்டை பூர்த்தி செய்ய தினமும் ஒரு பீட்ரூட் சாப்பிடலாம். இதன் மூலம் எலும்பு மெலிதல் நோய் போன்ற எலும்பு சார்ந்த நோய்களின் அபாயத்தை குறைக்கலாம்.
LPG சிலிண்டர்களல் ஏற்படும் விபத்துகளை குறைப்பது எப்படி….
சரும ஆரோக்கியத்திற்கு நல்லது:
பீட்ரூட்டில் உள்ள இரும்புச்சத்து, வைட்டமின் A, வைட்டமின் C, பொட்டாசியம், மெக்னீசியம் நார்ச்சத்து போன்ற ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் செரிமானம் மற்றும் சரும ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கின்றன.
பீட்ரூட்டில் உள்ள சத்துக்கள் சரும சேதத்தை சரி செய்து சருமத்தை தெளிவாகவும், பளபளப்பாக மாற்ற உதவுகின்றன.
பாத்ரூமில் படிந்திருக்கும் கரையை 15 நிமிடத்தில் போக்க தேயிலை மர எண்ணெய் போதும்…
இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | இயற்கை அழகு குறிப்புகள் |