நாள் முழுவதும் முகம் பளிச்சென்று வெள்ளையாக தெரிய இந்த ஒரு பேஸ் பேக் மட்டும் போதும்..!

Best Face Pack for Glowing Skin in Tamil

Best Face Pack for Glowing Skin in Tamil

இக்காலத்தில் அனைவருமே பிஸியான வாழ்க்கை முறையை வாழ்ந்து வருகிறோம். தினமும் காலையில் எழுந்து அவசர அவசரமாக வீட்டு வேலைகளை முடித்துவிட்டு சமைத்து எடுத்துக்கொண்டு வேலைக்கு செல்கிறோம். திரும்பவும் வீட்டிற்கு வந்து இரவு உணவுகளை சமைத்து சாப்பிட்டு உறங்கிவிடுகிறோம். இப்படி ஓடிக்கொண்டிருக்கும் வாழ்க்கையில் நம்முடன் ஆரோக்கியத்தையும் அழகையே பராமரிப்பது என்பது மிகவும் கடினமான ஒன்று. இருந்தாலும் நாம் அதற்கான எளிய வழிகளை மேற்கொள்வதன் மூலம் நம் அழகை பராமரிக்கலாம். எனவே, நம் முகத்தை எப்போதும் பளிச்சென்று வைத்திருக்கக்கூடிய எளிய இயற்கை அழகு குறிப்பு ஒன்றினை பற்றி இப்பதிவில் பார்க்கலாம் வாங்க.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Best Face Pack For Glowing Skin Home Remedy in Tamil:

பேஸ் பேக் -1

முகம் பொலிவு பெற

தேவையான பொருட்கள்:

  • கடலை மாவு – 2 ஸ்பூன் 
  • கஸ்தூரி மஞ்சள் – 1 ஸ்பூன் 
  • தேங்காய் பால் – 1 ஸ்பூன் 

முதலில், ஒரு கிண்ணத்தில் கடலை மாவு மற்றும் கஸ்தூரி மஞ்சள் எடுத்து கொள்ளுங்கள். இது பேஸ்ட் பதத்திற்கு வரும்வரை தேங்காய்ப்பால் சேர்த்து நன்கு கலந்து எடுத்து கொள்ளுங்கள்.

இதனை உங்கள் முகத்தில் அப்ளை செய்து 20 நிமிடங்கள் வரை வைத்துவிடுங்கள். அதன் பிறகு, குளிர்ந்த நீரை கொஞ்சமாக முகத்தில் அப்ளை செய்து 2 நிமிடம் வரை நன்கு மசாஜ் செய்து முகத்தை தண்ணீரை மட்டும் கொண்டு நன்கு கழுவி துடைத்து விடுங்கள்.

இந்த பேஸ் பயன்படுத்திய 1 மணிநிறம் அல்லது 2 மணிநேரம் கழித்து முகத்தை சோப்பு கழுவினால் நல்ல ரிசல்ட் கிடைக்கும்.

இவ்வாறு நீங்கள் வாரத்தில் 5 நாட்கள் தொடர்ந்து செய்து வந்தால் உங்கள் முகம் பளிச்சென்று மின்னும்.

எப்படித்தான் உங்களுக்கு இவ்வளவு முடி வளந்ததுன்னு கேட்பாங்க.. நீங்கள் மட்டும் இதை செஞ்சீங்கன்னா…

பேஸ் பேக் -2

 best face pack for glowing skin home remedy in tamil

தேவையான பொருட்கள்:

  • அரிசி மாவு – 2 ஸ்பூன் 
  • பால் – 3 ஸ்பூன் 
  • தேன் – 1 ஸ்பூன்

ஒரு கிண்ணத்தில் அரிசி மாவு, பால் மற்றும் தேன் ஆகிய மூன்று பொருட்களையும் எடுத்து கொள்ளுங்கள். இவை மூன்றையும் நன்கு கலந்து முகத்தில் அப்ளை செய்து கொள்ளுங்கள்.

20 நிமிடங்கள் வரை உலரவிட்டு அதன் பிறகு, முகத்தை தண்ணீர் கொண்டு முகத்தை கழுவி சுத்தம் செய்து விடுங்கள்.

இவ்வாறு நீங்கள் வாரத்திற்கு மூன்று அல்லது நான்கு முறை செய்து வந்தால் உங்கள் முகம் பளபளப்பாக மாறும்.

10 நிமிடத்தில் முகம் பளப்பளன்னு மின்ன முல்தானி மெட்டியுடன் இதை மட்டும் கலந்து முகத்தில் போடுங்கள்..!

இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> இயற்கை அழகு குறிப்புகள்