Fast Skin Whitening Home Remedies in Tamil
பெரும்பாலானோர், தனது முகம் வெள்ளையாகவும் அழகாகவும் இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால் முகமோ அதற்கு மாறாக இருக்கும். இருந்தாலும் முகத்தை வெண்மையாக வைக்க பல வழிகளை மேற்கொண்டு இருப்போம். ஒரு சிலர் முகம் வெள்ளையாகும் க்ரீம்களையும் வாங்கி உபயோகிப்பார்கள். ஆனால் இந்த க்ரீம்கள் எல்லாம் ஒரு சில நாட்கள் தான் பலனளிக்கும். நீங்கள் இதனை பயன்படுத்துவதை நிறுத்தி விட்டால் அது உங்களுக்கு பலவிதமான பக்க விளைவுகளை ஏற்படுத்தும். எனவே எப்போதும் நமக்கு பலனளிப்பது இயற்கை பொருட்கள் தான். எனவே இப்பதிவில் இயற்கையான பொருட்களை வைத்து எப்படி முகத்தை வெண்மையாக்குவது என்பதை இப்பதிவில் பின்வருமாறு பார்க்கலாம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
Best Face Whitening Home Remedy in Tamil:
தேவையான பொருட்கள்:
- கஸ்தூரி மஞ்சள் – 1 டீஸ்பூன்
- சந்தன பொடி – 1/2 டம்ளர்
- கோரைக்கிழங்கு – 50 கிராம்
- மகிழம்பூ பொடி– 50 கிராம்
- வெந்தயம் –25 கிராம்
- உலர்ந்த பன்னீர் இதழ் – 3 டம்ளர்
- பாசிப்பயறு – 1 டம்ளர்
தயாரிக்கும் முறை:
மேற்கூரிய தேவையான பொருட்கள் அனைத்தையும் எடுத்து கொள்ளுங்கள். இதனை தனித்தனியாக நிழலில் வைத்து நன்கு உலர்த்தி கொள்ளுங்கள்.
இவை அனைத்தும் நன்றாக உலர்ந்ததும் அதனை மிக்ஸி ஜாரில் சேர்த்து ஒரு பாட்டிலில் போட்டு வைத்து கொள்ளுங்கள்.
இந்த பொடியை நீங்கள் தினமும் 15 நிமிடத்திற்கு முன்னால் பயன்படுத்தி வரலாம்.
பயன்படுத்தும் முறை:
முதலில் ஒரு கிண்ணத்தில் உங்கள் முகத்திற்கு தேவையான அளவில் இந்த பவுடரை எடுத்து கொள்ளுங்கள். பிறகு, இதில் எலுமிச்சை, கற்றாழை, பால் அல்லது தயிர் போன்றவற்றின் ஏதேனும் ஒன்றினை கலந்து முகத்திற்கு அப்ளை செய்து கொள்ளுங்கள்.
பிறகு 15 நிமிடம் கழித்து முகத்தை நன்றாக கழுவி விடுங்கள்.
முக்கியமாக இந்த பவுடரை பயன்படுத்தும்போது சோப்பு பயன்படுத்துவதை தவிர்த்தால் இன்னும் அதிக பலன்களை பெறலாம்.
உங்க முகம் எப்போதும் டல்லாவே இருக்கா.. அப்போ நீங்க இத தான் செய்யணும்.. செம ரிசல்ட் கிடைக்கும்.
இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | இயற்கை அழகு குறிப்புகள் |