Best Fast Hair Growth Oil at Home in Tamil
தலையில் முடி கொட்டிய பிறகு முடி வளராமலே இருக்கா.. அப்போ இந்த எண்ணெயை பயன்படுத்தி பாருங்கள். உங்கள் முடி வேகமாக வளர்வதுடன் முடியை கொட்டாமலும் வைத்து கொள்ளும். இந்த எண்ணெய் தயார் செய்வதற்கு நம் ஊர்களில் எளிதாக கிடைக்கும் மூன்றே மூன்று பொருள் மட்டும் போதும். அந்த பொருள் வேறொன்றுமில்லை செம்பருத்தி இலை, வெந்தயம் மற்றும் கருவேப்பிலை தான் இந்த பொருளை வைத்து முடியை எப்படி வேகமாக வளர வைப்பது எப்படி என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
How To Make Oil For Hair Growth and Thickness in Tamil:
முதலில், செம்பருத்தி இலை மற்றும் கருவேப்பிலையை நன்றாக கழுவி ஈரப்பதம் இல்லாதவாறு துடைத்து உலரவைத்து எடுத்து கொள்ளுங்கள்.
அதன் பிறகு, ஈரப்பதம் இல்லாத ஒரு மிக்ஸியை எடுத்து கொள்ளுங்கள். அதில், 3 ஸ்பூன் வெந்தயம், 5 செம்பருத்தி இலை மற்றும் 1 கைப்பிடி கருவேப்பிலையை சேர்த்து கொள்ளுங்கள்.
இந்த மூன்று பொருட்களையும் கொரகொரப்பாக அரைத்து எடுத்து கொள்ளுங்கள். (தண்ணீர் சேர்க்கக்கூடாது)
இப்போது, அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் 300 மிலி அளவிற்கு தேங்காய் எண்ணெயை சேர்த்து கொள்ளுங்கள்.
எண்ணெய் சூடானதும் அதில் அரைத்து வைத்த கலவையை சேர்த்து கொதிக்க விடுங்கள். அடுப்பை மிதமான தீயில் வைத்து கொதிக்க வைக்க வேண்டும்.
அதன் பிறகு, எண்ணெய் நிறம் மாறியதும் அதனை எடுத்து சிறிது நேரம் ஆறவைத்து கொள்ளுங்கள். நன்கு ஆறியதும் அதனை ஒரு ஒரு கண்ணாடி பாட்டிலில் வடிகட்டி எடுத்து கொள்ளுங்கள்.
இந்த எண்ணெயை நீங்கள் 2 மாதம் வரை வைத்து தலைக்கு பயன்படுத்தலாம்.
தலைகுளிக்குப்பதற்கு முன்பாகவே இந்த எண்ணெயை தலையில் நன்கு அப்ளை செய்து 5 நிமிடம் மசாஜ் செய்து அதன் பிறகு 1 மணி நேரம் வைத்து குளிக்க வேண்டும்.
இவ்வாறு நீங்கள் வாரத்திற்கு இரண்டு முறை என 1 மாதம் தொடர்ந்து பயன்படுத்தி வந்தாலே போதும் உங்களின் முடி வளர்ச்சி அதிகரிப்பதை நீங்களே உணரலாம்.
போதும் போதும் என்கின்ற அளவிற்கு முடி வளர செம்பருத்தி ஒன்று போதும்.. எப்படி பயன்படுத்தனும் தெரியுமா..
இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | இயற்கை அழகு குறிப்புகள் |