Best Hair Growth Oil in Tamil
தினசரி வாழ்க்கையில் முடி உதிர்தல் ஆண், பெண் இருபாலரும் சந்தித்து கொண்டு தான் வருகிறார்கள். தலை முடி உதிர்வுக்கு ஊட்டச்சத்துக்கள் குறைபாடு உள்ள உணவுகளை சாப்பிடாமல் இருப்பது அல்லது தலை முடியை ஓழுங்காக பராமரிக்காமல் இருப்பது இது போன்ற காரணங்களால் தலை முடி உதிர்வு ஏற்படுகிறது. அதற்கு ஏற்ப நாமும் சத்தான உணவு மற்றும் சுகாதாரமான வாழ்க்கையை கொண்டிருந்தால் நல்ல அடர்த்தியான முடியை வளர செய்யலாம். அதற்காக கடைகளில் விற்கும் செயற்கையான பொருட்களை பயன்படுத்தி வருவார்கள். ஆனால் அவை நமக்கு முழுமையான பயனை அளிக்குமா என்று சரியாக சொல்ல முடியாது. அதனால் இயற்கையான முறையில் வீட்டிலேயே தயாரிக்கும் எண்ணெயை பயன்படுத்தி முடி வளர்ச்சியை அதிகப்படுத்துவது எப்படி என்று தெரிந்து கொள்வதற்கு இந்த பதிவை முழுமையாக படித்து பார்த்து தெரிந்து கொள்வோம் வாங்க.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl
எண்ணெய் தயாரிக்க தேவையான பொருட்கள் :
- அரை கீரை- 1/2 கப்
- கரிசலாங்கண்ணி கீரை-1/2 கப்
- சிவப்பு பொன்னாங்கண்ணி கீரை-1/2 கப்
- கருவேப்பிலை- 1/2 கப்
- கற்றாழை ஜெல் – சிறிதளவு
- தேங்காய் எண்ணெய் – 50 மிலி
- கருஞ்சீரகம் – 50 கிராம்
- கார்போக அரிசி ( நாட்டு மருந்து கடையில் கிடைக்கும்)- 50 கிராம்
15 நாட்களில் கொட்டிய இடத்தில் புதிய முடி வளர இந்த எண்ணெய் மட்டும் தடவுங்க..!
எண்ணெய் தயாரிப்பது எப்படி.?
ஸ்டெப் : 1
முதலில் அரை கீரை, கரிசலாங்கண்ணி கீரை, சிவப்பு பொன்னாங்கண்ணி கீரை கருவேப்பிலை, கற்றாழை ஜெல் மற்றும் தேங்காய் எண்ணையை சம அளவு எடுத்து மிக்சியில் சேர்த்து அரைத்து கொள்ளவும். தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அரைத்து கொள்ளவும்.
ஸ்டெப் : 2
அதன் பிறகு அரைத்து வந்த விழுதை வடிகட்டி சாற்றை மட்டும் எடுத்து கொள்ளவும். அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து வடிகட்டிய சாற்றை ஊற்றி தேங்காய் எண்ணெய் விட்டு மிதமான சூட்டில் வைத்து கிளறிக்கொண்டு இருக்கவும். சிறிது நேரம் கழித்து எண்ணெயானது பொங்கி வரும் நிலை ஏற்படும்.
ஸ்டெப் :3
எண்ணெயானது பொங்கி அடங்கியதும், கார்போக அரிசியும், கருஞ்சீரகம் போட்டு கொதிக்க விடவும். கொதித்த எண்ணெய்கள் ஆறியதும் வடிகட்டி வைத்து வடிக்கட்டி எண்ணெயை மட்டும் தனியாக ஒரு பாட்டில் ஸ்டோர் செய்து கொள்ளவும்.
அப்ளை செய்யும் முறை:
தயாரித்து வைத்த எண்ணெயை வாரத்திற்கு ஒரு முறை தேய்த்து குளிக்கவும், இவ்வாறு செய்வதனால் முடியின் வளர்ச்சியை அதிகப்படுத்த முடியும்.
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |