Best Hair Oil for Hair Growth and Thickness
தலைமுடி அடர்த்தியாகவும், நீளமாகவும் வளர வேண்டும் என்ற காரணத்தினால் பலரும் கடைகளில் விற்கக்கூடிய எண்ணெய்களை வாங்கி பயன்படுத்து வருகிறார்கள். அப்படி பார்த்தால் இவ்வாறு நாம் கடைகளில் வாங்கி பயன்படுத்தும் எண்ணெயினால் நாம் எதிர்பார்த்த மாதிரியான பலன்களை பெற முடியும் என்று கூற முடியாது. ஏனென்றால் இவை எல்லாம் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே பலனை அளித்து விட்டு அதன் பின்பு பழைய நிலைக்கே வந்து விடுகிறது. அதனால் இன்றைய பதிவில் வெறும் 15 நாட்களில் முடி நீளமாகவும், அடர்த்தியாகவும் வளர வைக்க எண்ணெய் தயாரித்து அதனை எப்படி பயன்படுத்துவது என்பதை தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
முடி நீளமாகவும் அடர்த்தியாகவும் வளர எண்ணெய்:
முடியின் வளர்ச்சிக்கு எண்ணெய் தயாரிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை முதலில் எடுத்து வைத்து கொள்ளுங்கள்.
- வெந்தயம்- 2 ஸ்பூன்
- கறிவேப்பிலை- 1 கைப்பிடி அளவு
- தேங்காய் எண்ணெய்- 200 மில்லி
முதலில் 2 ஸ்பூன் வெந்தயத்தை ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து நன்றாக பவுடர் போல அரைத்து தனியாக வைத்து விடுங்கள். அதன் பிறகு கறிவேப்பிலையினையும் நன்றாக பவுடர் போல் அரைத்து விடுங்கள். கறிவேப்பிலை அரைக்கும் போது தண்ணீர் சேர்க்கக்கூடாது.
அதன் பிறகு 200 கிராம் தேங்காய் எண்ணெயினை ஒரு கடாயில் சேர்த்து நன்றாக காய விடுங்கள். பின்பு எண்ணெய் காய்ந்த பிறகு அதில் கறிவேப்பிலை மற்றும் வெந்தய பொடியை சேர்த்து நன்றாக 15 நிமிடம் வரை கொதிக்க விடுங்கள்.
கடைசியாக கடாயில் உள்ள எண்ணெய் நன்றாக கொதித்த உடன் அதனை வடிகட்டி ஒரு பாத்திரத்தில் ஊற்றி வைய்யுங்கள். இப்போது உங்களுக்கான எண்ணெய் தயார்.
பயன்படுத்தும் முறை:
தயார் செய்து வைத்துள்ள எண்ணெயினை வாரம் 2 முறை நன்றாக தலையில் அப்ளை செய்து 20 நிமிடம் கழித்து தலை குளித்து விடுங்கள். இத்தகைய முறையினை நீங்கள் செய்வதன் மூலம் முடி ஆனது விரைவில் வேகமாகவும், நீளமாகவும் வளரும்.
அசுர வேகத்தில் முடி வளர வேண்டுமா அப்போ இதை ட்ரை பண்ணுங்க
இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | இயற்கை அழகு குறிப்புகள் |