Best Hair Style For Salwar Suit
நாம் அனைவரும் தலைமுடியினை பராமரிப்பதில் முக்கியதுவம் அதிகமாக அளித்து வருவோம். அதுமட்டும் இல்லாமல் எப்போதும் முடி கருப்பாகவும் மற்றும் நரைமுடி வராமல் இருக்க வேண்டும் என்றும் நினைப்போம். இவ்வாறு நாம் பார்த்து பார்த்து பராமரித்து வந்த முடியினை நம்முடைய ஆடைகளுக்கு ஏற்றவாறு ஹேர் ஸ்டைல் செய்வோம். ஹேர் ஸ்டைல் என்பது ஒற்றை வார்த்தையாக இருந்தாலும் கூட அதில் நிறைய வகைகள் இருக்கிறது. நாம் ஒரு சிலருக்கு என்ன ஆடைக்கு என்ன மாதிரியான ஹேர் ஸ்டைல் செய்வது என்று தெரியாமல் உள்ளது. அதனால் இன்றைய பதிவில் சல்வார் சூட்டிற்கு பெண்கள் எந்த மாதிரியான ஹேர் ஸ்டைல் எல்லாம் செய்யலாம் என்பதை பற்றி பார்க்கலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
Twisted Half Up: (முறுகப்பட்ட பாதி முடி)
நீங்கள் சல்வார் சூட் ஆடையினை அணிய விரும்பினால் அதற்கு ஏற்ற ஹேர் ஸ்டைலாக முறுக்கப்பட்ட பாதி முடி ஹேர் ஸ்டைல் ஏற்றதாக இருக்கும்.
இந்த ஹேர் ஸ்டைலிற்கு முதலில் தலையினை வாரிக் கொள்ள வேண்டும். பின்பு பாதி முடியினை கீழே விட்டு விட்டு மீதம் இருக்கும் பாதி முடியினை மட்டும் மேலே முறுக்கியவாறு ஹேர் ஸ்டைல் செய்ய வேண்டும்.
Simple Bun: (கொண்டை)
அதேபோல் சல்வார் சூட் ஆடை நீங்கள் அணிய போகிறீர்கள் என்றால் முதலில் ஷாம்பு போட்டு தலை குளித்து விட வேண்டும்.
பின்பு தலைமுடியினை நன்றாக காய வைத்து எளிமையான முறையில் கொண்டை போட்டு விட வேண்டும். அந்த கொண்டையினை சுற்றி அலங்கரிக்கப்பட்ட பூக்கள் அல்லது மல்லிகை பூ வைத்து விடுங்கள். இது பார்க்க மிகவும் அழகாக இருக்கும்.
Wearing Crown: (கிரீடம் அணிந்த ஹேர் ஸ்டைல்)
இந்த ஆடையினை அணிந்தால் அதற்கு உகந்த ஹேர் ஸ்டைலாக கிரீடம் அணிந்த பின்னல் ஏற்ற ஒன்றாக இருக்கும். நீங்கள் முதலில் இரண்டு பக்கமும் முடியினை எடுத்து இடைவெளி விட்டு பின்னிக் கொண்டு அதனை மடக்கி உள்ளே வைக்க வேண்டும்.
இவ்வாறு செய்த முடித்த பிறகு அதன் இடையில் பூக்கள் வைத்தால் பார்க்கவே அழகாக இருக்கும்.
Pin Up: (ஒரு பக்க பின் அமைப்பு)
முதலில் நீங்கள் தலை குளித்த பிறகு முடியினை நன்றாக காய வைக்க வேண்டும். இவ்வாறு செய்து முடித்த பிறகு ஒரு பக்கத்தில் உள்ள முடியினை மட்டும் எடுத்து கற்கள் நிறைந்த கிளிப்பினால் குற்றி விட வேண்டும்.
இந்த ஹேர் ஸ்டைல் சல்வார் சூட் ஆடைக்கு எடுப்பான ஒன்றாக இருக்கும்.
Sleek & Stylish: (நேரான மற்றும் ஸ்டைலிஷ் ஹேர் ஸ்டைல்)
உங்களுடைய முடி ஆனது நேராகவும் மற்றும் பளபளப்பாகவும் இருந்தால் மட்டுமே போதும் இந்த ஹேர் ஸ்டைலை நீங்கள் செய்தால் அழகாக இருக்கும். அதனால் இந்த ஹேர் ஸ்டைலை செய்த பிறகு சல்வார் சூட்டை அணியலாம்.
புடவையில் நீங்கள் உயரமாக தெரிய வேண்டுமா அப்போ இதை மட்டும் பண்ணுங்க
இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | இயற்கை அழகு குறிப்புகள் |