கருமையான மற்றும் அடர்த்தியான முடிக்கு
ஆரோக்கியமான, கருமையான பளபளப்பான கூந்தலை நாம் அனைவரும் விரும்புவோம். ஆனால் அந்த கருமையான அடர்த்தியான கூந்தல் நம்மில் பலருக்கு கனவாகத்தான் உள்ளது. சிலருக்கு ஹார்மோன் மாற்றங்களின் காரணமாக அடர்த்தியான முடி உதிர்ந்து வாழ் போன்ற தோற்றத்தில் காணப்படும். அதனால் பலருக்கு மனஉளைச்சல்கள் ஏற்படும்.நமது கூந்தலை முறையான பராமரிப்பின் மூலம் இழந்த பழைய கூந்தலை நம்மால் கொண்டுவர முடியும். இன்று உள்ள சுற்றுசூழல் மாசுபடும் நமது கூந்தல் உதிர்வில் முக்கிய காரணியாக உள்ளது. ஆனால் ஒரு சில இயற்கை பொருட்களால் நமது முடி உதிர்வை குறைக்க முடியும். ன்னம் முன்னோர்கள் கடைபிடித்த வழக்கங்களை நாமும் பின்பற்றினால் நமது முடி உதிர்வை படிப்படியாக குறைத்து கருமையான மற்றும் அடர்த்தியான முடியை பெறலாம். வாருங்கள் அந்த இயற்கை பொருட்கள் என்ன?, அவற்றை எவ்வாறு பயன்படுத்துவது என்று இந்த பதிவில் முழுமையாக பார்க்கலாம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
உங்களின் முடியின் வளர்ச்சியை அதிகரிக்க ஆலிவ் எண்ணெய்:
எண்ணெய் தயாரிக்க தேவையான பொருட்கள்:
ஆலிவ் எண்ணெய், வெந்நீர், பூண்டு, பருத்தி துண்டு
மசாஜ் செய்யவதற்கான எண்ணெய் தயாரிக்கும் முறை:
முதலில் பூண்டை அரைத்து அதில் இருந்து சாற்றை பிரித்தெடுக்க வேண்டும். ஆலிவ் எண்ணெயுடன் பிரித்தெடுத்த பூண்டு சாற்றை சேர்க்க வேண்டும்.
பிறகு, ஆலிவ் எண்ணெய் பூண்டு கலந்த சாற்றை சிறிது சூடாக்கி, உச்சந்தலையில் மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும்.
பின்பு வெதுவெதுப்பான நீரில் காட்டன் துண்டை ஊறவைத்து, அதை உங்கள் தலையில் சுற்றிக்கொள்ள வேண்டும்.
அதிகபட்சம் 10 நிமிடங்களுக்கு உங்கள் தலைமுடியை அலசவும்.
ஆலிவ் எண்ணெயின் பலன்கள்:
ஆலிவ் எண்ணெயில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் புதிய முடி வளர்ச்சியைத் தூண்டுவதாக அறியப்படுகிறது, அதே நேரத்தில் எண்ணெய் உங்கள் தலைமுடியை மென்மையாக்கும் இயற்கையான கண்டிஷனராக செயல்படுகிறது. பச்சை பூண்டில் வைட்டமின் சி நிரம்பியுள்ளது, இது முடி வளர்ச்சியை அதிகரிக்கிறது மற்றும் அதில் உள்ள செலினியம் இரத்த ஓட்டத்தை ஊக்குவிக்கிறது. நீங்கள் உச்சந்தலையில் ஒரு எளிய தேங்காய் பால் மசாஜ் முயற்சி செய்யலாம். முடி வளர்ச்சிக்கு தேங்காய் பால் அதன் இயற்கையான வைட்டமின்கள் மற்றும் மறுசீரமைப்பு பண்புகள் காரணமாக அதிசயங்களைச் செய்கிறது.அரோமா மேஜிக் ஆலிவ் ஆயிலை உங்கள் வழக்கமான ஹேர் ஆயிலுடன் கலந்து உச்சந்தலையில் மசாஜ் செய்து ஆழமான கண்டிஷனிங் செய்யலாம்.
இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | இயற்கை அழகு குறிப்புகள் |