இயற்கையான கருமையான அடர்த்தியான முடிக்கு இத மட்டும் Use பண்ணிப்பாருங்க…

Advertisement

இயற்கையான கருமையான கூந்தலுக்கு 

பொதுவாக ஆண்களாக இருந்தாலும் சரி பெண்களாக இருந்தாலும் சரி உடல் ரீதியாக பல பிரச்சனைகள் இருக்கும். அதாவது முடி கொட்டுவது, முகப்பருக்கள், கரும்புள்ளிகள், நரைமுடி போன்ற சில பிரச்சனைகள் இருக்கும். இந்த பிரச்சனைகள் அனைவருக்கும் வருவது இயற்கை தான். அதுபோல நாமும் இந்த பிரச்சனைகளை இயற்கையான முறையில் தான் சரி செய்ய வேண்டும். சரி பொதுவாக பெண்கள் அனைவருக்குமே முடி நீளமாகவும் அடர்த்தியாகவும் வளர வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆண்களுக்கு நரைமுடியை மறக்க என்ன செய்வது, முடி எப்போதும் கருமையாக இருக்க வேண்டும் என்னும் ஆசை இருக்கும். அதற்காக கடைகளில் கிடைக்கும் அனைத்து விதமான எண்ணெய்கள் மற்றும் டை பயன்படுத்துவார்கள். இதனால் எந்த பயனும் இல்லை. எனவே இயற்கை முறையில் வீட்டில் உள்ள இந்த 2 பொருட்களை மட்டும் பயன்படுத்தினால் போதும் முடி நிமிடத்தில் கருமையாக மாறிவிடும். இன்றைய பதிவில் வீட்டில் இருந்தே முடியை கருமையாக மாற்றுவதற்கான குறிப்பை பார்க்கலாம் வாருங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

உங்களின் முடியின் வளர்ச்சியை அதிகரிக்க :

முடியின் நிறம் மாறுவதற்கு போதுமான வைட்டமின்கள் கறிவேப்பிலை மற்றும் எலுமிச்சை பழங்களில் உள்ளது.

எலுமிச்சை பழத்தில் உள்ள அமில தன்மை வெள்ளை முடியின் நிறத்தை கருமையாக மாற்ற உதவுகிறது.

தேவையான பொருட்கள்:

கறிவேப்பிலை – 1 கைப்பிடி அளவு
தேங்காய் எண்ணெய் – 3 தேக்கரண்டி
எலுமிச்சை – 1

எண்ணெய் தயாரிப்பதற்கான வழிமுறைகள்:

ஒரு சிறிய வாணலியில் தேங்காய் எண்ணையை சூடாக்கி அதனுடன் கருவேப்பிலை சேர்த்து அந்த எண்ணெயின் நிறம் கருமையாக மாறும் வரை சூடாக்க வேண்டும்.

அந்த எண்ணெயை வடிகட்டி குளிர்வித்து, அதனை உங்கள் தலையில் பயன்படுத்தும் போது அதில் சிறு துளி எலுமிச்சை சாறு சேர்த்து கொள்ளவும்.

இப்போது அந்த குளிர்ந்த எண்ணெயை உங்கள் தலைமுடி மற்றும் உச்சந்தலையில் நன்றாக மசாஜ் செய்யவும்.
குறைந்த பட்சம் ஒரு மணிநேரத்திற்கு உங்கள் தலையை உலர விடவும்.

oil to make grey hair black in tamil

பின்னர் செம்பருத்தி இலையை அறைந்து அதன் சாறை கொண்டு உங்கள் தலை முடியை அலசவும்.

இப்படி வாரத்திற்கு இருமுறை செய்வதால் உங்கள் முடியின் நிறம் மாறுவது மட்டுமல்லாமல் முடியின் வளர்ச்சியும் அதிகரிக்கும்.

இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> இயற்கை அழகு குறிப்புகள்

 

Advertisement