Homemade Beauty Tips For Brides Before Marriage
பெண்களே அனைவரும் முகத்தை பளபளப்பாக வைத்து கொள்ள வேண்டும் என்று தான் நினைக்கின்றனர். அதிலும் திருமண வயது பெண்கள் அல்லது திருமணம் ஆக கூடிய பெண்கள் அனைவரும் எப்படி முகத்தை பளபளப்பாக வைத்து கொள்வது என்று சிந்தனை செய்வார்கள். இதற்காக பார்லருக்கு சென்று அங்குள்ள மேக்கப் அனைத்தையும் ட்ரை செய்வார்கள். ஆனால் அதில் முழுமையான பலன் கிடைத்திருக்காது. அதனால் இந்த பதிவில் முகத்தை எப்படி பளபளப்பாக வைத்து கொள்வது என்று அறிந்து கொள்வோம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl
முகத்தை பளபளப்பாக வைத்து கொள்வதற்கு செய்ய வேண்டியவை:
முகத்தை பளபளப்பாக வைத்து கொள்வதற்காக கிரீம்களை அப்ளை செய்தால் மட்டும் போதாது. உடலில் தேவையான சத்துக்களும் இருக்க வேண்டும். அதனால் உடலை எப்படி பராமரிக்க வேண்டும் என்று தெரிந்து கொள்வோம் வாங்க..
தண்ணீர் குடிப்பது:
உங்களுக்கு தண்ணீர் குடித்த பிறகு சிறிது நேரத்திலே தண்ணீர் தாகம் அடிக்கிறது என்றால் தண்ணீர் அதிகமாக குடிக்க வேண்டும். தண்ணீர் அதிகமாக குடித்தால் முகம் மற்றும் உடலை பாதுகாப்பாக வைத்து கொள்ள முடியும். மேலும் உடலை நீரேற்றமாகவும் வைத்து கொள்ள உதவுகிறது.
சத்தான உணவுகள்:
உங்களின் வாழ்நாள் முழுவதும் பளபளப்பாக வைத்து கொளல் வேண்டுமென்றா ல் ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வது அவசியமானது. காய்கறிகள், பழம் ஜூஸ், பருப்பு வகைகள், வைட்டமின்கள், இரும்பு சத்து உணவுகள் போன்றவை சாப்பிட வேண்டும்.
பொறித்த உணவுகளை தவிர்க்க வேண்டும்:
நீங்கள் பொறித்த உணவுகள், வறுத்த உணவுகள் அதிகமாக சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் சில நேரங்களில் தோல் மற்றும் முகத்தில் அலர்ஜியை ஏற்படுத்தலாம். மேலும் முகப்பரு ஏற்படுவதற்கும் வாய்ப்புகள் இருக்கிறது.
Summer -லும் உங்கள் முகம் பொலிவுடன் இருக்க இந்த டிப்ஸை ட்ரை பண்ணுங்க |
நன்றாக தூங்க வேண்டும்:
மனிதனுக்கு தூக்கம் ரொம்ப முக்கியம். நீங்கள் இரவு நன்றாக தூங்கினால் தான் முகத்தை பளபளப்பாக வைத்து கொள்ள முடியும். முக்கியமாக இரவு தூங்குவதற்க்கு முன்பு மேக்கப்பை ரீமூவ் செய்து விட்டு தூங்க வேண்டும்.
பளபளப்பான சருமத்திற்கு வாழைப்பழ பேஸ் பேக்:
வாழைப்பழத்தில் பொட்டாசியம் இருப்பதால் முகத்தை பளபளப்பாக வைத்து கொள்ள உதவுகிறது. இதற்கு வாழைப்பழத்தின் தோலை நீக்கி விட்டு மசித்து கொள்ளவும். இதனுடன் 1 தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய் சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த பேக்கை முகத்தில் அப்ளை செய்து 20 நிமிடம் வைத்திருந்து பிறகு தண்ணீரில் கழுவ வேண்டும்.
இந்த பேக்கை திருமணத்திற்கு ஒரு மாதத்திற்கு முன்பு ஒரு வாரத்திற்கு 2 அல்லது 3 முறை செய்ய வேண்டும்.
2 நாட்களில் கரும்புள்ளிகள் மறைந்து முகம் அழகாக தோன்ற இந்த பேஸ் பேக்கை போடுங்க |
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |