வளராத முடியையும் வளர வைக்க விளக்கெண்ணயில் இதை கலந்து தடவுங்க..

Advertisement

Castor Oil for Hair Growth in Tamil

பொதுவாக ஆண்களை விட பெண்கள் தான் முடி அதிகமாக வளர வேண்டும் என்று நினைப்பார்கள். இதனால் கடையில் விற்கும் கெமிக்கல் நிறைந்த ஷாம்பூ மற்றும் எண்ணெய்களை பயன்படுத்துகிறார்கள். இதனை பயன்படுத்தும் போது வேண்டுமானால் முடி வளர்வதை காண்பீர்கள். ஆனால் இதனை பயன்படுத்துவதை விட்டு விட்டால் முடி உதிர்வு ஏற்படும். மேலும் ஆரோக்கியத்திலும் பிரச்சனையை ஏற்படுத்தும். அதனால் இயற்கையான வழியை தேர்தெடுப்பது நல்லது. எனவே இந்த இந்த பதிவில் இயற்கையான முறையில் முடியை வளர வைப்பது எப்படி என்று தெரிந்து கொள்வோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

முடி வளர எண்ணெய் செய்ய தேவையான பொருட்கள்:

அரிசி- 50 கிராம்

தண்ணீர்- ஒரு கப்

செம்பருத்தி இலை- 10

செம்பருத்தி பூ- 5

விளக்கெண்ணெய்- 3 ஸ்பூன்

எண்ணெய் செய்முறை:

ஒரு முடிக்கு பக்கத்தில் 10 முடி வளர 

விளக்கெண்ணையானது நமது உடலில் உள்ள சூட்டை குறைத்து குளிர்ச்சியாக வைத்து கொள்வதற்கு  உதவுகிறது. இதனால் முடி உதிர்வு ஏற்படுவதை தடுக்கிறது.

செம்பருத்தியை உள்ள சத்துக்கள் இளநரை ஏற்படாமல் தடுக்கிறது. மேலும் முடியின் வளர்ச்சிக்கும் உதவுகிறது.

முதலில் எடுத்து வைத்துள்ள அரிசியை 2 முறை கழுவி கொள்ளவும். பின் கழுவிய அரிசியுடன் 1 கப் தண்ணீர் ஊற்றி கொள்ளவும். அதனுடன் செம்பருத்தி பூ, செம்பருத்தி இலை சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.

இந்த தண்ணீரானது ஒரு நாள் இரவு அப்படியே இருக்க வேண்டும். மறுநாள் காலையில் தான் பயன்படுத்த வேண்டும்.

அசுர வேகத்தில் முடி வளர வேண்டுமா.! அப்போ இதை ட்ரை பண்ணுங்க

அப்ளை செய்யும் முறை:

இந்த பேக்கை பயன்படுத்துவதற்கு முன் அதில்  3 தேக்கரண்டி விளக்கெண்ணெய் சேர்த்து கலந்து கொள்ளவும். பிறகு இதனை தலை முடி முழுவதும் அப்ளை செய்து 15 நிமிடம் வைத்திருக்க வேண்டும். பிறகு தலையை அலச வேண்டும்.

ஒரு வேலை உங்களுக்கு தலையானது பிசுபிசுப்பு தன்மையுடன் இருப்பதாக உணர்ந்தால் நீங்கள் எப்பொழுதும் பயன்படுத்தும் ஷாம்பை பயன்படுத்தி தலை தேய்த்து குளிக்க வேண்டும்.

இந்த பேக்கை வாரத்தில் இரண்டு நாட்கள் என்று தொடர்ந்து பயன்படுத்தி வர வேண்டும். இப்படி செய்து வந்தாலே முடியின் வளர்ச்சியை காண்பீர்கள்.

இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> இயற்கை அழகு குறிப்புகள்

 

Advertisement