தலைமுடி அடர்த்தியாகவும், நீளமாகவும் வளர தேங்காய் எண்ணெயில் இந்த ஒரு பொருளை கலந்து தடவுங்க..

coconut oil use for hair growth in tamil

Coconut Oil Use For Hair Growth

தலைமுடி அடர்த்தியாகவும், நீளமாகவும் வளர வேண்டும் என்று தான் ஆசைப்படுகின்றனர். ஆனால் இதற்காக பலரும் கடையில் விற்கும் கெமிக்கல் நிறைந்த பொருட்களை பயன்படுத்துகின்றனர். இதனால் முடியை ஆரோக்கியமாக வளர செய்யாது. அதனால் தான் இயற்கையான முறையில் முடியை வளர செய்ய தேங்காய் எண்ணெயில் இந்த ஒரு பொருளை கலந்தால் போதும் முடியை அதிகமாக வளர செய்யும்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👉 https://bit.ly/3Bfc0Gl

தேங்காய் எண்ணெய் மற்றும் கருவேப்பிலை:

தேங்காய் எண்ணெய் முடி வளர

கருவேப்பிலையில் பீட்டா கரோட்டீன் அதிகமாக இருப்பதால் முடி வளர்ச்சியை தூண்டும். ஊட்டச்சத்துக்கள் ஆக்சிஜனேற்றங்கள், அமிலங்கள் நிறைந்துள்ளது. இவை முடி உதிர்தலை தடுக்கிறது.

கருவேப்பிலையை எடுத்து இரண்டு நாட்கள் வெயிலில் காய வைத்து கொள்ளவும். இதனை 100 மில்லி லிட்டர் தேங்காய் எண்ணெயில் சேர்த்து கொதிக்க விடவும். இதனை வடிக்கட்டியை பயன்படுத்தி சக்கை இல்லாமல் வடிகட்டவும். இந்த எண்ணெயை தலை முடியில் தடவி மசாஜ் செய்து குளிக்க வேண்டும்.

தேங்காய் எண்ணெய் மற்றும் கலோஞ்சி விதைகள்:

தேங்காய் எண்ணெய் முடி வளர

கலோஞ்சி விதைகளில் வைட்டமின்கள் ஏ, பி மற்றும் சி, மெக்னீசியம், துத்தநாகம், இரும்பு பொட்டாசியம் மற்றும் அத்தியாவசிய கொழுப்பு போன்ற ஊட்டச்சத்துக்களிலும் நிறைந்துள்ளன. இதில் உள்ள சத்துக்கள் முடி உதிர்வை கட்டுப்படுத்தி முடி வளர்ச்சியை அதிகப்படுத்துகிறது.

கலோஞ்சி விதைகளை பேஸ்ட்டாக அரைத்து கொள்ளவும். இதனை தேங்காய் எண்ணெயில் சேர்த்து இரண்டு நாட்கள் அப்படியே விடவும். பிறகு பயன்படுத்தும் போது எண்ணெயை லேசாக சூடுபடுத்தி தலையில் தேய்த்து மசாஜ் செய்யவும்.

வியர்வை வராமல் இருக்க இதெல்லாம் பண்ணுங்க 

செம்பருத்தி பூ:

தேங்காய் எண்ணெய் முடி வளர

செம்பருத்தி பூவில் வைட்டமின் ஏ, சி நிறைந்துள்ளது, இவை முடி உதிர்வையும் தடுத்து, நரைமுடி வருவதையும் தடுக்கிறது.

செம்பருத்தி பூக்களை சுத்தமாக கழுவி விட்டு காய விடவும். பின் காய்ந்த இலைகளை தேங்காய் எண்ணெயில் சேர்த்து சூடுப்படுத்தவும். பிறகு இவை ஆறியதும் ஒரு பாட்டிலில் ஸ்டோர் செய்து வைத்து கொள்ளவும். இந்த எண்ணெயை தலையில் தடவி ஒரு மணி நேரம் வைத்திருந்து பிறகு தலை தேய்த்து குளிக்க வேண்டும்.

மேல் கூறப்பட்டுள்ள குறிப்பில் ஏதவாது ஒன்றை தொடர்ந்து அப்ளை செய்து வாருங்கள், முடி உதிர்வு பிரச்சனை தீர்ந்து முடி வளர்ச்சியை அதிகப்படுத்துகிறது.

👉தலையில் இருக்கும் போடுகினை நீக்குவதற்கு இந்த ஹேர் பேக்கை பயன்படுத்துங்க 

இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> இயற்கை அழகு குறிப்புகள்