Cucumber Face Pack Home Remedies in Tamil
பொதுவாக முக அழகை பொறுத்தவரை பெரும்பாலும் எல்லாருக்கும் அதிகப்படியான முக்கியத்துவம் இருக்கும். ஏனென்றால் முகம் என்பது ஒருவரது அடையாளமாகவும் இருக்கிறது. அந்த வகையில் தனது முகத்தை அழகாக வைக்க வேண்டும் என்பதற்காக பலரும் சில அழகக்குறிப்புகள் பயன்படுத்துவார்கள். அந்த அழகுக்குறிப்புகள் பெரும்பாலும் வீட்டில் இருக்கும் பொருட்களை மட்டுமே வைத்து செய்யக்கூடிய ஒன்றாக தான் இருக்கிறது.
அதாவது தக்காளி, வெள்ளரிக்காய் மற்றும் பப்பாளி, கடலைமாவு என இதுபோன்ற முறைகளில் தான் Face Pack-யை தயார் செய்து அப்ளை செய்வார்கள். அப்படி பார்த்தால் என்ன தான் நவீன முறை இருந்தாலும் கூட இதுபோன்ற சின்ன சின்ன குறிப்புகளை பயன்படுத்துவார்கள். அந்த வகையில் இன்றைய பதிவில் வெள்ளரிக்காய் வைத்து செய்யக்கூடிய அழகுக்குறிப்பு பற்றி தான் பார்க்கப்போகிறோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
வெள்ளரிக்காய் அழகு குறிப்புகள்:
- தேன்
- வெள்ளரிக்காய்
- எலுமிச்சை
முதலில் வெள்ளரிக்கையினை நன்றாக தோல் சீவிக்கொண்டு சிறு சிறு துண்டாக நறுக்கி அதில் இருந்து சாறு பிழிந்து கொள்ளுங்கள். அதன் பிறகு 1 எலுமிச்சை பழத்தை எடுத்துக்கொண்டு அதனையும் சாறு பிழிந்து எடுத்துக்கொள்ளுங்கள்.
இப்போது ஒரு பவுலில் உங்களது முகத்திற்கு தேவையான அளவு வெள்ளரிக்காய், தேன் மற்றும் எலுமிச்சை என இவை அனைத்தினையும் நன்றாக சேர்த்து கலந்து அப்படியே 10 நிமிடம் வரை வைத்து விடுங்கள்.
முகத்தை பளிச்சென்று மாற்றக்கூடிய வெள்ளரிக்காய் Face Pack தயார்.
பயன்படுத்தும் முறை:
நீங்கள் தயார் செய்து வைத்துள்ள Face Pack-ஐ 10 நிமிடம் கழித்து முகத்தில் அப்ளை செய்து கொள்ளுங்கள். அதன் பிறகு அந்த Face Pack-யை முகத்தில் அப்படியே 10 முதல் 15 நிமிடம் வரை வைத்து விடுங்கள்.
பின்பு குளிர்ந்த நீரினை கொண்டு முகத்தை கழுவி விடுங்கள். இவ்வாறு செய்வதன் மூலம் முகம் விரைவில் நன்றாக பளபளப்பாக மாறிவிடும்.
முடி வளர்ச்சிக்காக பாட்டி சொன்ன வைத்தியம் என்னான்னு தெரிஞ்சுக்கோங்க..
இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | இயற்கை அழகு குறிப்புகள் |