இந்த 1 பொருளை தேங்காய் எண்ணெயில் கலந்து பாருங்க..! 1 முடி கூட கொட்டாது..!

Advertisement

முடி அடர்த்தியாக வளர

நம் அனைவருக்குமே முடி நன்றாக வளர வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதிலும் பெண்களுக்கு முடி நீளமாகவும் அடர்த்தியாகவும் வளர வேண்டும் என்ற பேராசை இருக்கும். ஆனால் அனைவருக்கும் இருக்க கூடிய மிகப்பெரிய ஆசை என்றால் அது முடி கொட்டாமல் இருப்பது தான். அதற்காக நாம் கடைகளில் கிடைக்கும் கண்ட எண்ணெய்களை வாங்கி பயன்படுத்துகிறோம். இதனால் கொஞ்சம் இருக்கும் முடியும் கொட்ட ஆரம்பிக்கிறது. அதனால் கடைகளில் கிடைக்கும் எண்ணெய்களை வாங்கி பயன்படுத்துவதை விட்டுவிட்டு வீட்டிலேயே இயற்கையான பொருட்களை பயன்படுத்தி எண்ணெய் தயார் செய்து தடவி பாருங்க. முடி நீளமாகவும் அடர்த்தியாகவும் வளரும். சரி வாங்க நண்பர்களே எண்ணெய் தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

முடி உதிர்வை சரி செய்யும் எண்ணெய்: 

முடி அடர்த்தியாக வளர

  1. தேங்காய் எண்ணெய் – 200 ml 
  2. கருவேப்பிலை – தேவையான அளவு
  3. விளக்கெண்ணெய் – 1 ஸ்பூன்

முதலில் ஒரு கைப்பிடி அளவு அல்லது நீங்கள் தேங்காய் எண்ணெய் எடுத்து கொள்ளும் அளவிற்கு தேவையான அளவு கருவேப்பிலை எடுத்து கொள்ளுங்கள்.

இந்த கருவேப்பிலையில் இருக்கும் சத்துக்கள் நம் அனைவருக்குமே தெரியும். முடி உதிர்வை சரி செய்து, முடியை அடர்த்தியாகவும் நீளமாகவும் வளர செய்கிறது. மேலும் நரை முடியை நீக்கி முடியை கருமையாக வளர செய்யும் பண்புகள் அதிகமாகவே இருக்கிறது. 

3 நாட்கள் போதும்.. முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் காணாமல் போய்விடும்

அதனால் உங்களுக்கு தேவையான அளவு கருவேப்பிலை எடுத்து கொள்ளுங்கள். அதை 3 நாட்கள் வரை நன்றாக காயவைக்க வேண்டும். பின் கருவேப்பிலை மற்றும் அதில் இருக்கும் குச்சி எல்லாவற்றையும் ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளுங்கள்.

பின் ஒரு கிண்ணத்தில் தேங்காய் எண்ணெய் எடுத்து, அதில் நாம் அரைத்து வைத்துள்ள கருவேப்பிலையை சேர்த்து கொள்ளுங்கள். பின் அதில் 1 ஸ்பூன் அளவிற்கு விளக்கெண்ணெய் சேர்த்து 1 நாள் வரை அப்படியே விட்டுவிடுங்கள்.

1 நாள் கழித்து அந்த எண்ணெயை வடிகட்டி எடுத்து கொள்ளுங்கள். அவ்வளவு தான் பிரண்ட்ஸ் முடி உதிர்வை சரி செய்து முடியை நீளமாகவும் அடர்த்தியாகவும் வளர செய்யும் எண்ணெய் தயார்.

பயன்படுத்தும் முறை:

இந்த எண்ணெயை எப்பொழுதும் பயன்படுத்துவது தலைக்கு தடவி வாருங்கள். அல்லது தலை குளிக்கும் 1 மணி நேரத்திற்கு முன் தலையில் தடவி வைத்திருந்து பின் குளியுங்கள். இதுபோல செய்து வந்தால் முடி உதிர்வு நின்று முடி நீளமாகவும் அடர்த்தியாகவும் வளர்வதை காண்பீர்கள்.

கண்ணில் உள்ள கருவளையங்களை நீக்க தக்காளி சாறு மட்டும் போதுமா.

இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> இயற்கை அழகு குறிப்புகள்
Advertisement