கை கருமை நீங்க
ஆண்களாக இருந்தாலும், பெண்களாக இருந்தாலும் எப்போதும் நமது முகத்தினை அழகாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கும். இத்தகைய ஆசையினை எப்படியாவது நாம் நிலைநாட்டி வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கும் போது தான் முகத்தில் பருக்கள், கால் மற்றும் கை முட்டிகளில் கருமை மற்றும் நரை முடி என இந்த பிரச்சனை எல்லாம் ஏற்படும். இத்தகைய பிரச்சனை எல்லாம் நாம் அனைவருக்கும் சாதாரணமாக வரக்கூடிய ஒன்றாக இருந்தாலும் கூட சில நேரத்தில் இவை நீங்கள் அப்படியே இருந்து விடுகிறது. அந்த வகையில் இன்று கை முட்டிகளில் ஏற்படும் கருமை நீங்க பாட்டி சொன்ன வைத்தியம் என்னவென்று தெரிந்துக்கொண்டு அதனை ட்ரை செய்யலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
Dark Hands Home Remedies:
கை முட்டிகளில் ஏற்படும் கருமை நீங்க வேண்டும் என்றால் முதலில் சிறிதளவு சுடு தண்ணீர் வைத்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகு மிதமான சூட்டில் இருக்கும் தண்ணீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி கொள்ளுங்கள்.
இப்போது இந்த தண்ணீரில் காட்டன் டவல் அல்லது துணியினை நனைத்து பிழிந்து கொள்ள வேண்டும். அதன் பிறகு இந்த துணியினை கருமை உள்ள இடத்தில் சுற்றி கட்டிக் கொள்ளுங்கள். மேலும் இந்த முறையினை 3 அல்லது 4 முறை செய்ய வேண்டும்.
இதற்கு அடுத்தநிலையாக குளிர்ந்த நீரில் ஒரு துணியினை நனைத்து கையில் கருமை உள்ள இடத்தில் துடைத்து விடுங்கள்.
அடுத்து ஒரு பாத்திரத்தில் 2 ஸ்பூன் சர்க்கரை மற்றும் 1/2 எலுமிச்சை பழத்தில் இருக்கும் சாற்றினை பிழிந்து கொண்டு நன்றாக பேஸ்ட் போல கலந்து கொள்ளுங்கள்.
கடைசியாக மற்றொரு பாதி இருக்கும் எலுமிச்சை பழத்தினை கலந்து வைத்துள்ள பேஸ்ட்டில் நனைத்து கருமை உள்ள இடத்தில் நன்றாக தடவ வேண்டும். இவ்வாறு செய்து 5 நிமிடம் அப்படியே விட்டு விடுங்கள்.
5 நிமிடம் கழித்து சிறிதளவு தயிரில் தண்ணீர் கலந்து முன்பு தடவிய பேஸ்ட்டின் மீது இதையும் அப்ளை செய்து 2 நிமிடம் அப்படியே இருக்க விடுங்கள்.
2 நிமிடம் கழித்து வழக்கம் போல் குளிர்ந்த நீரினால் கழுவி விடுங்கள். இந்த முறையினை ஒருநாள் விட்டு 1 செய்து வந்தால் போதும் எப்பேர்ப்பட்ட கை முட்டி கருமையும் நீங்கி விடும்.
பெண்களே முகத்தில் இருக்கும் முடி நீங்க பாட்டி சொன்ன வைத்தியம் என்னன்னு தெரியுமா
இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | இயற்கை அழகு குறிப்புகள் |