3 நாட்கள் போதும்..! முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் காணாமல் போய்விடும்..!

Advertisement

கரும்புள்ளிகள் மறைய 

ஹலோ பிரண்ட்ஸ்..! பொதுவாக ஆண்கள் பெண்கள் யாராக இருந்தாலும் முகம் அழகாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அதிலும் பெண்கள் பற்றி சொல்லவே வேண்டாம். முக அழகிற்காக கடைகளில் கிடைக்கும் பொருட்களை வாங்கி பயன்படுத்துகிறார்கள். இதனால் நாளடைவில் முகத்தில் பருக்கள் வந்து அது கரும்புள்ளிகளாக மாறிவிடுகிறது. இதனால் முகத்தில் இருக்கும் அழகே பொலிவிழந்து காணப்படுகிறது. மீண்டும் இதை சரி செய்வதற்காக கண்ட கிரீம்களை வாங்கி பயன்படுத்துகிறார்கள். இப்படி செய்வதால் சருமத்திற்கு மேலும் பல பாதிப்புகள் வருகிறது. அதனால் இயற்கையான பொருட்களை கொண்டு தான் கரும்புள்ளிகளை அகற்றவேண்டும். அதனால் இந்த பதிவில் 3 நாட்களில் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகளை அகற்ற சூப்பரான டிப்ஸ் பற்றி பார்க்கலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

கரும்புள்ளிகள் காணாமல் போக டிப்ஸ்: 

கரும்புள்ளிகள் காணாமல் போக டிப்ஸ்

  1. உருளைக்கிழங்கு
  2. ரோஸ் வாட்டர்
  3. தயிர்

முதலில் ஒரு உருளைக்கிழங்கை எடுத்து அதை சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளுங்கள். பின் அதை ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து அதனுடன் தண்ணீருக்கு பதிலாக ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் போல அரைத்து கொள்ளுங்கள்.

பின் அதை ஒரு கிண்ணத்தில் மாற்றி அதில் 1 ஸ்பூன் அளவிற்கு தயிர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.

அவ்வளவு தான் கரும்புள்ளிகளை அகற்றும் பேஸ் பேக் ரெடி..!

5 நாட்களில் மருக்கள் இருந்த இடம் தெரியாமல் மறைய பூண்டு மட்டும் போதும்..

அப்ளை செய்யும் முறை: 

இந்த பேக்கை உங்கள் முகத்தில் அப்ளை செய்வதற்கு முன் உங்கள் முகத்தை குளிர்ந்த நீரால் கழுவி கொள்ளுங்கள். பின் இந்த பேக்கை உங்கள் முகத்தில் அப்ளை செய்து குறைந்தது 20 நிமிடம் வைத்திருந்து பின் முகத்தை கழுவி கொள்ளுங்கள். இதுபோல தொடர்ந்து 3 நாட்கள் செய்து வந்தால் கரும்புள்ளிகள் மறைவதை நீங்களே காணலாம்.

கரும்புள்ளிகள் மறைய டிப்ஸ்: 

கரும்புள்ளிகள் மறைய டிப்ஸ்

அடுத்து ஒரு கிண்ணத்தில் 4 ஸ்பூன் அல்லது உங்கள் முகத்திற்கு தேவையான அளவு அரிசி சேர்த்து கொள்ளுங்கள். பின் அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 3 மணி நேரம் ஊறவிடுங்கள்.

பின் அரிசி ஊறியதும் அதை பேஸ்ட் போல அரைத்து கொள்ளுங்கள். இந்த பேஸ்டை உங்கள் முகத்தில் கரும்புள்ளிகள் இருக்கும் இடத்தில் அப்ளை செய்து 30 நிமிடம் வரை அப்படியே வைத்திருந்து பின் முகத்தை கழுவி கொள்ளுங்கள்.

இதுபோல தொடர்ந்து செய்து வந்தால் கரும்புள்ளிகளை விரைவாக மறையும்.

கண்ணில் உள்ள கருவளையங்களை நீக்க தக்காளி சாறு மட்டும் போதுமா.

இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> இயற்கை அழகு குறிப்புகள்
Advertisement