Double Fast Hair Growth Tips at Home in Tamil
பொதுவாக ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி அவரவர் தலைமுடி வளர்ச்சியை அதிகரித்து கொள்ள வேண்டும் என்று சிந்தனை செய்வார்கள். அதே போல் அதற்காக பல முயற்சிகளை மேற்கொள்வார்கள். ஆனால் அப்படி நாம் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் நமக்கு வெற்றியையும் நல்ல பலனையும் அளிக்குமா என்றால் இல்லை என்பதே கசப்பான உண்மை. ஆனாலும் நமது முயற்சியை கைவிட்டு விடக்கூடாது. அதனால் தான் இன்றைய பதிவில் உங்கள் தலைமுடியை நன்கு வளர வைக்க உதவும் ஒரு குறிப்பினை பற்றி விரிவாக பார்க்க போகின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள குறிப்பினை பயன்படுத்தி உங்களின் தலை முடியை நன்கு வளர வைத்து கொள்ளுங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
Thick Hair Growth Tips in Tamil:
இயற்கையான முறையில் உங்களின் தலை முடியை எவ்வாறு வளர வைப்பது என்பதற்கு உதவும் ஒரு குறிப்பினை பற்றி விரிவாக காணலாம். முதலில் இந்த குறிப்பிற்கு தேவையான பொருட்களை பார்க்கலாம்.
- கருஞ்சீரகம் – 1 டேபிள் ஸ்பூன்
- வெந்தயம் – 1 டேபிள் ஸ்பூன்
- மிளகு – 1/2 டேபிள் ஸ்பூன்
- தேங்காய் எண்ணெய் – தேவையான அளவு
- ஆமணக்கு எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
- வைட்டமின் E கேப்சூல் – 2
உங்க முகம் நிலவுடனே போட்டி போடுகின்ற அளவுக்கு பளபளப்பாக மாற பீட்ரூட்டை இப்படி பயன்படுத்துங்க போதும்
மிக்சி ஜாரை எடுத்து கொள்ளவும்:
முதலில் ஒரு மிக்சி ஜாரை எடுத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 1 டேபிள் ஸ்பூன் கருஞ்சீரகம், 1 டேபிள் ஸ்பூன் வெந்தயம் மற்றும் 1/2 டேபிள் ஸ்பூன் மிளகு ஆகியவற்றை சேர்த்து நன்கு பொடியாக அரைத்து கொள்ளுங்கள்.
பின்னர் இதனை ஒரு மூடி போட்ட பாத்திரத்தில் எடுத்து வைத்து கொள்ளுங்கள்.
கிண்ணத்தை எடுத்து கொள்ளவும்:
பின்னர் ஒரு கிண்ணத்தை எடுத்து அதில் தேவையான அளவு தேங்காய் எண்ணெயை ஊற்றி கொள்ளுங்கள். பின்னர் அதில் நாம் அரைத்து வைத்துள்ள பொடியில் இருந்து 1 டேபிள் ஸ்பூன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.
ஆமணக்கு எண்ணெயை சேர்த்து கொள்ளவும்:
அடுத்து அதனுடன் நாம் எடுத்து வைத்துள்ள 1 டேபிள் ஸ்பூன் ஆமணக்கு எண்ணெயை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.
வைட்டமின் E கேப்சூலை கலந்து கொள்ளவும்:
இறுதியாக நாம் எடுத்து வைத்துள்ள 2 வைட்டமின் E கேப்சூலில் உள்ள சாற்றினை மட்டும் சேர்த்து கொள்ளுங்கள். பிறகு இதனை இரவு தூங்க செல்வதற்கு முன்னால் உங்கள் தலை முடியின் வேர்களில் படுமாறு தடவி 10 முதல் 15 நிமிடங்கள் நன்கு மசாஜ் செய்து கொள்ளுங்கள்.
இதனை இரவு முழுவதும் அப்படியே வைத்து கொண்டு காலையில் நீங்கள் அன்றாடம் பயன்படுத்தும் ஷாம்பு அல்லது சீயக்காயை பயன்படுத்தி தலைக்கு குளியுங்கள். இதனை வாரம் இரு முறை அல்லது மூன்று முறை தொடர்ந்து செய்து வந்தீர்கள் என்றால் உங்களின் தலை முடி வளர்ச்சி அதிகரிக்கும்.
நீங்களே போதும்டா முடி வளர்ந்தது அப்படின்னு சொல்லனுமா அப்போ இந்த வெந்தயம் மட்டும் போதும்
டக்குனு உங்க நரைமுடி எல்லாம் கருப்பாக மாற வெந்தயம் மட்டும் போதும்
இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | இயற்கை அழகு குறிப்புகள் |