கண்ணில் உள்ள கருவளையம் நீங்க கிராமத்து ரெமிடி ட்ரை பண்ணுங்க

Advertisement

கண் கருவளையம் நீங்க இயற்கை மருத்துவம்

முகத்தின் அழகைக் கெடுக்கும் கண்களுக்கு கீழ் உண்டாகும் கருவளையம் இன்று பலரும் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்றாக உள்ளது. முன்பு வயதானோர் மட்டுமே பாதிக்கப்பட்டிருந்த இந்த பிரச்சனையை தற்போது வயது வரம்பு இல்லாமல் ஆண்கள், பெண்கள் என அனைவரும் சந்திக்கின்றனர்.

அதிக நேரம் லேப்டாப், மொபைல் போன்றவற்றை பயன்படுத்துதல், வேலைப்பளு காரணமாக தூக்கமின்மை, மன அழுத்தம் போன்ற பல்வேறு காரணங்களால் கண்களில் கருவளையங்கள் ஏற்படுகின்றன. இவ்வாறு கருவளையம் வருவதனால் முகம் பொலிவிழந்து வயதான தோற்றம் ஏற்படுகிறது. இதனை சரி செய்வதற்கு இயற்கையான வழிமுறையை பற்றி அறிந்து கொள்வோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

கருவளையம் ஏற்பட காரணம்: 

சரியான நேரத்திற்கு தூங்காமல் இருப்பது, மன அழுத்தம், அதிக நேரம் டீவி பார்ப்பது, அதிக நேரம் மொபைல் பார்ப்பது, ஊட்டச்சத்து குறைபாடு போன்ற காரணங்களால் கருவளையம் ஏற்படுகிறது. இதனை ஆரம்பத்திலே பார்த்து சரி செய்தால் முழுமையாக சரி செய்ய முடியும், அதுவே நீங்கள் கருவளையம் முழுமையாக வந்த பிறகு அதனை பார்த்தால் குணப்படுத்துவது நாட்கள் ஆகும்.

கருவளையம் நீங்க உருளைக்கிழங்கு:

கண் கருவளையம் நீங்க இயற்கை மருத்துவம்

உருளைக்கிழங்கில் வைட்டமின் சி, ஏ மற்றும் என்சைம்களின் செழுமை கண்களைச் சுற்றியுள்ள தோலுக்கு புத்துணர்ச்சி மற்றும் ஊட்டமளிக்க உதவுகிறது.

முதலில் உருளைக்கிழங்கை வட்ட வடிவில் நறுக்கி கொள்ளவும், இதிலிருந்து ஒரு பகுதியை எடுத்து கண்ணிற்கு மேலே வைத்து 10 நிமிடம் அல்லது 15 நிமிடம் வரைக்கும் அப்படியே வைத்திருக்க வேண்டும். அதன் பிறகு முகத்தை குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இந்த குறிப்பை வாரத்திற்கு இரண்டு முறை பயன்படுத்த வேண்டும்.

பனிக்காலத்தில் முகத்தை பளபளப்பாக தேனுடன் இதையும் சேர்த்து அப்ளை செய்யவும்..

வெள்ளரிக்காய்:

கண் கருவளையம் நீங்க இயற்கை மருத்துவம்

கருவளையை பிரச்சனைக்கு வெள்ளரிக்காய் சிறந்த மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. இதில் ஆன்டிஆக்ஸிடன்ட்களின் சக்தி-குக்குர்பிடசின், வைடெக்சின், ஐசோஸ்கோபரின், வைட்டமின் சி மற்றும் கே போன்ற சத்துக்கள் ஆனது கருவளையங்களை சரி செய்வதற்கு உதவுகிறது.  வெள்ளரிக்காய் கண்களைச் சுற்றியுள்ள இரத்த ஓட்டம் சென்று கருவளையங்களை நீக்கி முகத்தை பொலிவாக மாற்றுகிறது.

இதற்கு வெள்ளரிக்காயை வட்ட வடிவில் நறுக்கி விட்டு இரண்டு துண்டுகளை எடுத்து கொள்ள வேண்டும். இதில் இருக்கும் ஒரு துண்டை எடுத்து கண்ணிற்கு மேலே வைக்க வேண்டும். இதனை 20 நிமிடத்திற்கு அப்படியே வைக்க வேண்டும். இந்த துண்டுகளை 5 நிமிடத்திற்கு ஒரு முறை மாற்றி கொண்டே இருக்க வேண்டும். அதன் பிறகு குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும்.

இல்லை உங்களால் துண்டுகளாக வைக்க முடியவில்லை என்றால் பேஸ்ட்டாக அரைத்து கண்ணிற்கு கீழே அப்ளை செய்து இரவு முழுவதும் வைத்திருந்து காலையில் எழுந்து கழுவி விடலாம்.

இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> இயற்கை அழகு குறிப்புகள்
Advertisement