Eye Dark Circle Remove Home Remedy
தான் அழகாக இருக்க வேண்டும் என்று நினைத்து பெரும்பாலானவர்கள் செயற்கையாக தயாரிக்கப்பட்ட கிரீம்களை வாங்கி அப்ளை செய்கின்றனர். இதனால் அவ்வப்போது வேண்டுமானால் ரிசல்ட்டை கொடுக்கலாம், நாளடைவில் முகத்தில் பிரச்சனையை ஏற்படுத்தலாம். முகத்தில் ஏற்படும் பிரச்சனைகளில் ஒன்றாக இருப்பது கருவளையம். நம் தோலின் நிறம் வெண்மையாகஇருந்தாலும், கண்ணை சுற்றி கருவளையம் வந்தால் கருப்பாக அவை மட்டும் தான் தனியாக தெரியும். அதனால் தான் இந்த பதிவில் கண்ணை சுற்றியுள்ள கருவளையங்களை நீக்க இயற்கையான வழிமுறைகளை பற்றி இந்த பதிவின் வாயிலாக அறிந்து கொள்வோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
கருவளையங்களை நீக்க வெள்ளரிக்காய்:
வெள்ளரிக்காயை எடுத்து தோல்களை சீவி விட்டு வட்ட வடிவில் நறுக்கி கொள்ளவும். இதனை கண்ணிற்கு மேல் பகுதியில் வைத்து 15 நிமிடம் வைத்திருக்க வேண்டும். அதன் பிறகு கண்களை கழுவி விட வேண்டும். இதனை தினமும் பயன்படுத்தி வாருங்க ரிசல்ட்டை பெறலாம்.
வெள்ளரிக்காயில் ஆன்டிஆக்ஸிடன்ட்களின் சக்தி-குக்குர்பிடசின், வைடெக்சின், ஐசோஸ்கோபரின், வைட்டமின் சி மற்றும் கே ஆகியவற்றுடன் சேர்ந்து, வீக்கம் மற்றும் கருவளையங்களை ஏற்படுத்தும் வீக்கத்தைக் குறைக்கிறது. வெள்ளரிக்காய் கண்களைச் சுற்றியுள்ள இரத்த ஓட்டத்தை தளர்த்தி மேம்படுத்துகிறது மற்றும் அதன் துவர்ப்பு தன்மை சருமத்தை ஒளிரச் செய்கிறது.
இடுப்புக்கு கீழே முடி வளரணுமா.! அப்போ இந்த எண்ணெயை தடவி பாருங்க..
உருளைக்கிழங்கு:
உருளைக்கிழங்கை எடுத்து தோல்களை சீவி விட்டு வட்ட வடிவில் நறுக்கி கொள்ளவும். இதனை கண்களில் மேல் பகுதியில் வைத்து 15 நிமிடம் வைத்திருக்க வேண்டும். அதன் பிறகு குளிர்ந்த நீரால் கழுவி விட வேண்டும்.
உருளைக்கிழங்கில் வைட்டமின் சி, ஏ போன்ற சத்துக்கள் தோலுக்கு புத்துணர்ச்சியை தருகிறது. இதனால் கண்களை சுற்றயுள்ள கருவளையம் நீங்குகிறது.
தக்காளி:
தக்காளியை நறுக்கி மிக்சியில் சேர்த்து அரைத்து கொள்ளவும், பின்பு இதனை வடிக்கட்டியை பயன்படுத்தி வடிக்கட்டி சாற்றை மட்டும் எடுத்து கொள்ளவும்.
இந்த சாற்றை கண்களை சுற்றி தடவி விட்டு 15 நிமிடம் வைத்திருக்க வேண்டும். அதன் பிறகு குளிர்ந்த நீரை பயன்படுத்தி கழுவி விட வேண்டும்.
இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | இயற்கை அழகு குறிப்புகள் |