இயற்கையான முக பொலிவுக்கு
மாசு, மறு, பரு நீங்கி இயற்கையான அழகான சருமத்தை பெற வேண்டும் என்பது அனைவரின் விருப்பமாக இருக்கும். இந்த விருப்பம் பாகுபாடு இல்லாமல் ஆண், பெண் பெரியவர்கள் சிறியவர்கள் என அனைவரும் விரும்புவது. என்னதான் விலைஉயர்ந்த கிரீம் பயன்படுத்தினாலும் முகம் பொலிவு என்பது சிறிது நேரம் மட்டும் தான் இருக்கும். ஆனால் இயற்கை முறையில் நாம் பயன்படுத்தும் பொருட்கள் நிரந்தரமாக இயற்கையான முக பொலிவை தரும். உண்மையை சொன்னால் நம்முடைய சருமம் பொலிவாகவும், பளபளப்பாகவும் இருப்பதற்கு எந்த வகை கிரீம் தேவையில்லை. உணவே மருந்து இதுவே உங்களின் இயற்கையான முகப்பொலிவிற்கு வழிவகுக்கும். அந்த வகையில் நாம் இந்த பதிவில் இயற்கையாக சருமத்தை பொலிவு பெற கடைப்பிடிக்கவேண்டிய வழிகளை தெரிந்து கொள்வோம் வாருங்கள்.
இயற்கையான சரும பொலிவுக்கு 5 வழிகள்…
தண்ணீர்:
உடலில் எப்போதும் ஈரப்பதத்தை தக்க வைத்து கொள்வது அவசியம். மிருதுவான மற்றும் பொலிவான முகத்தை பெற அடிக்கடி தண்ணீர் அருந்த வேண்டும்.
தண்ணீர் குடிக்க பிடிக்கவில்லை என்றால் இளநீர், நெல்லக்காய் எலுமிச்சை அல்லது மாதுளை ஜூஸ் குடிக்கவேண்டும்.
உணவு:
சருமத்தின் பொலிவுக்கு துணை புரிவது நாம் உண்ணும் உணவுகள் தான். சரும பொலிவிற்கு வைட்டமின் சி மற்றும் நார் சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
சூரிய ஒளி:
சூரிய ஒளியில் உள்ள வைட்டமின் சி உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. தினமும் சிறிது நேரமாவது சிறிய ஒளியில் இருக்க வேண்டும். மாலை வேலை இளம் வெயில் சருமத்திற்கு நல்லது.
உடற்பயிற்சி:
நாம் மேற்கொள்ளும் உடற்பயிற்சிகள் நமது உடலில் தேங்கியுள்ள தேவையற்ற கொழுப்புகளை அகற்றி உடலும் மனமும் சுறுசுறுப்பாக இருக்க உதவும்.
தினமும் 1 மணி நேரமாவது சூரிய ஒளியில் உடற்பயிற்சி செய்வது நல்லது. சதைகளில் உள்ள இறுக்கங்கள் மாற உடற்பயிற்சி உதவும்.
தூக்கம்:
தூக்கம் நமது உடல் ஆரோக்கியத்திற்கு மிக மிக முக்கியமானது. நாம் உறங்கும் நேரம் மற்றும் காலையில் துயில் எழும் நேரம் எப்பொழுதும் சரியானதாக இருக்க வேண்டும். இரவில் முன்பாக உறங்கி காலையில் சூரிய உதயத்திற்கு முன் எழுத்திருக்க வேண்டும். சூரிய உதயத்தின் போது ஏற்படும் கதிர்கள் சரும ஆரோக்கியத்திற்கு நல்லது.
அடர்த்தியான மற்றும் கருமையான முடிக்கு இந்த எண்ணெய் போதுங்க….
இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | இயற்கை அழகு குறிப்புகள் |