முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்க பாட்டி சொன்னதுங்க

Advertisement

முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்க 

நம் பாட்டிகளுக்கெல்லாம் முகத்தில் பருக்கள், மருக்கள் போன்ற எந்த பிரச்சனையும் இல்லை. ஏனென்றால் அவர்கள் முகத்தை சரியாக பராமரித்தார்கள், முகத்திற்கு மஞ்சள் தேய்த்துகுளித்தார்கள். மஞ்சளில் உள்ள ஆன்டி பாக்ட்ரியா முகத்தில் எந்த பிரச்சனையையும் ஏற்படுத்தவில்லை. ஆனால் இன்றைய காலத்தில் இளம் வயது பெண்களுக்கு முகத்தில் பல பிரச்சனைகள் ஏற்படுகிறது.

அதில் ஒன்று தான் கரும்புள்ளி.இந்த கரும்புள்ளியானது ஆரம்பத்தில் பருக்களாக தான் வருகிறது, அதுவே நாளடைவில் கரும்புள்ளிகளாக மாறுகிறது. இதனை சரி செய்வதற்காக கெமிக்கல் நிறைந்த கிரீம்களை வாங்கி பயன்படுத்துகிறார்கள். இதனால் முகத்தில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகிறது. இந்த பதிவில் வீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தி முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை சரி செய்வது எப்படி என்று அறிந்து கொள்வோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

தயிர்:

முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்க 

முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை சரி செய்வதற்கு வீட்டில் உள்ள தயிர் மட்டும் போதும், சரி வாங்க இதனை பயன்படுத்துவது எப்படி என்று தெரிந்து கொள்வோம்.

தயிரில் லாக்டிக் அமிலம் உள்ளது, இந்த சத்து ஆனது முகத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி சருமத்தை புத்துணர்ச்சி ஆக செய்கிறது. இதற்கு நீங்கள் தயிரை முகத்தில் அப்ளை செய்து 20 நிமிடம் வைத்திருக்க வேண்டும். 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும்.

முடி வளர்ச்சிக்காக பாட்டி சொன்ன வைத்தியம் என்னான்னு தெரிஞ்சுக்கோங்க..

கற்றாழை ஜெல்:

முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்க 

கற்றாழையில் அலர்ஜியை எதிர்த்து போராடும் பண்பை கொண்டுள்ளது. மேலும் இவை மாய்ஸ்சரஸ் ஆக பயன்படுகிறது. இதற்கு நீங்கள் கற்றாழையின் தோல் பகுதியை சீவி உள்பகுதியில் இருக்கும் ஜெல்லை மட்டும் எடுத்து கொள்ள வேண்டும்.

கற்றாழை ஜெல்லை முகத்தில் தடவி 20 நிமிடம் வைத்திருந்து அதன் பிறகு குளிர்ந்த நீரை பயன்படுத்தி முகத்தை கழுவ வேண்டும்.

தக்காளி:

முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்க 

தக்காளியை மிகச் சிறந்த தோல் டோனராகப் பயன்படுத்தலாம். இது உங்கள் முகத்தில் உள்ள கரும்ப்புள்ளிகளை மறைத்து முகத்தை பளபளப்பாக வைத்து கொள்வதற்கு உதவுகிறது.

இதற்கு நீங்கள் ஒரு தக்காளியை எடுத்து அதனை பேஸ்ட்டாக அரைத்து கொள்ள வேண்டும். இந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி 1/2 மணி நேரம் வைத்திருக்க வேண்டும். அதன் பிறகு குளிர்ந்த நீரை பயன்படுத்தி முகத்தை கழுவ வேண்டும்.

மேல் கூறப்பட்டுள்ள குறிப்புகளில் ஏதாவது ஒன்றை பயன்படுத்தினாலே முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்கி முகம் பளபளப்பாக மாறும்.

 

இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> இயற்கை அழகு குறிப்புகள்

 

Advertisement