முகத்தை பளபளப்பாக மாற்ற கிரீம் அப்ளை செய்ய தேவையில்லை கழுவினால் போதும்..

Advertisement

Face Glow Face Wash at Home

முகத்தை அழகாக வைத்து கொள்ள வேண்டும் என்று தான் நினைக்கிறார்கள். ஆனால் சுற்றுசூழல் மாசுபாடு, வாழ்க்கை முறையினால் முகத்தில் பருக்கள், தேமல், கரும்புள்ளிகள் போன்ற பிரச்சனைகளை சந்திக்கின்றோம். இந்த பிரச்சனை எல்லாம் சரி செய்தால் ஆவது முகம் அழகாக இருக்கும் என்று நினைக்கின்றனர். இதற்காக கடையில் விற்கும் பொருட்களை வாங்கி பயன்படுத்துகின்றனர். இதனால் முகத்தில் பல பிரச்சனைகளை சந்திக்கின்றோம். எந்த பிரச்சனைக்கும் இயற்கையான முறையை கையாண்டால் எந்த பிரச்சனையும் இல்லாமல் நல்ல ரிசல்ட்டை பெற முடியும். அதனால் இந்த பதிவில் முகத்தை பளபளப்பாக மாற்றுவைத்து எப்படி என்று தெரிந்து கொள்வோம் வாங்க..

முகத்தை பளபளப்பாக மாற்றுவது எப்படி.?

முதலில் உங்களுடைய ஸ்கின் எந்த வகையக இருந்தாலும் முகத்தை அடிக்கடி சுத்தமான நீரில் கழுவ வேண்டும். ஏனென்றால் நீங்கள் வெளியில் சென்று வந்த பிறகு முகத்தில் அழுக்குகள் தேங்கியிருக்கும். அதோடு அப்படியே தூங்கி விட்டால் முகத்தில் பருக்கள் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

நீங்கள் வேலை பார்ப்பவராக இருந்தாலும் சரி, வீட்டில் இருப்பவராக இருந்தாலும் சரி ஒரு நாளைக்கு 4 அல்லது 5 முறை சுத்தமான நீரில் கழுவ வேண்டும்.

முகத்தை பளபளப்பாக மாற்ற பேஸ் வாஷ்:

face glow face wash at home

கடலை மாவு முகத்தில் ஏற்படும் அழுக்குகள் மற்றும் மாசுபாட்டை எதிர்த்து போராட உதவுகிறது. பச்சை பாலில் வைட்டமின் ஏ உள்ளது. இவை சருமத்தை ஈரப்பதமாக வைத்து கொள்வதற்கும், முகப்பரு தழும்புகளை நீக்குவதற்கும் உதவுகிறது.

இதற்கு நீங்கள் சிறிதளவு கடலை மாவு எடுத்து கொள்ளவும். இதனுடன் சிறிதளவு பசும் பாலை சேர்த்து பேஸ்ட்டாக மிஸ்ட் செய்து கொள்ளவும். இந்த பேக்கை அப்ளை செய்வதற்கு முன் முகத்தை நன்றாக கழுவி கொள்ளவும்.

பிறகு கலந்து வைத்த பேக்கை முகத்தில் அப்ளை செய்து 2 நிமிடத்திற்கு மசாஜ் செய்யவும். பிறகு சுத்தமான நீரில் முகத்தை கழுவ வேண்டும். இதை தினமும் இரண்டு முறை பயன்படுத்த வேண்டும்.

நீங்களே ஆச்சர்யப்படும் அளவிற்கு முக கருமை நீங்க இதை மட்டும் ட்ரை பண்ணுங்க போதும்
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil

 

Advertisement