முகமா பளபளப்பாக என்ன செய்ய வேண்டும்
பொதுவாக மனிதர்கள் அனைவரும் ஒரே மாதிரியான நிறத்தை கொண்டிருப்பதில்லை. ஒவ்வொருவரும் வெவ்வேறு நிறம், தோற்றம், குணம் உடையவர்களாக தான் இருக்கிறார்கள். நமது முகம் மட்டும் ஏன் இப்படி இருக்கிறது என்று கவலை அடைவதை விட அதற்கான வழிகளை தேடுவது சிறந்தது. அதற்காக கடையில் விற்கும் கெமிக்கல் நிறைந்த கிரீம்களை வாங்கி அப்ளை செய்ய கூடாது. ஏனென்றால் இதனால் முகத்தில் பருக்கள் போன்ற பிரச்சனையை ஏற்படுத்தும். அதனால் இயற்கையான முறையில் முகத்தை பளபளப்பாக மாற்றுவது எப்படி என்று தெரிந்து கொள்வோம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
முகம் பளபளப்பாக வீட்டு வைத்தியம்:
மஞ்சள்:
மஞ்சளில் அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் உள்ளன, இவை முகத்தை பளபளப்பாக வைத்து கொள்வதற்கு உதவுகிறது.
இதற்கு நீங்கள் ஒரு பவுலில் 1 டீஸ்பூன் மஞ்சள், 1 டேபிள் ஸ்பூன் தேன், 1 டேபிள் ஸ்பூன் பால்சேர்த்து பேஸ்ட்டாக கலந்து கொள்ளவும்.
இந்த பேஸ்ட்டை உங்கள் முகத்தில் தடவி 20 நிமிடங்கள் வைத்திருக்க வேண்டும். பிறகு வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவ வேண்டும். இது போல் வாரத்திற்கு 2 அல்லது 3 முறை பயன்படுத்தி வந்தால் முகம் பளபளப்பாக மாறிவிடும்.
பால்:
பாலில் லாக்டிக் அமிலம் உள்ளது, இவை சருமத்தை இறந்த செல்களை நீக்கி புத்துணர்ச்சி பெறவும், பளபளப்பாக வைத்து கொள்வதற்கும் உதவுகிறது.
இதற்கு ஒரு பவுலில் 1 டீஸ்பூன் பால், 1 டீஸ்பூன் தேன் கலந்து கொள்ளவும்.
இந்த பேக்கை உங்கள் முகத்தில் தடவி 15-20 நிமிடங்கள் வைத்திருக்க வேண்டும். பிறகு வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவ வேண்டும். இது போல் வாரத்திற்கு 2 அல்லது 3 முறை பயன்படுத்தி வந்தால் முகம் பளபளப்பாக மாறிவிடும்.
பப்பாளி:
பப்பாளியில் என்சைம்கள் உள்ளன, அவை சருமத்தை பளபளப்பாக வைத்து கொள்வதற்கு உதவுகிறது.
இதற்கு ஒரு கிண்ணத்தில் பழுத்த பப்பாளியை எடுத்து தோல்களை நீக்கி விட்டு உள்பகுதியில் இருக்கும் சதையினை மட்டும் எடுத்து கொள்ளவும். இதனை நன்றாக மசித்து கொள்ளவும்.பிறகு இதனை முகத்தில் தடவி 20 நிமிடங்கள் வைத்திருக்க வேண்டும். இது போல் வாரத்தில் இரு முறை செய்து வர வேண்டும்.
மேல் கூறப்பட்டுள்ள பேக்குகளில் ஏதாவது ஒன்றை தொடர்ந்து அப்ளை செய்து வந்தாலே போதுமானது.
இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | இயற்கை அழகு குறிப்புகள் |