30 நிமிடத்தில் உங்க முகம் பொலிவு பெற பாதாமை இப்படி பயன்படுத்துங்க போதும்..!

Face Glow Remedy at Home in Tamil

Face Glow Remedy at Home in Tamil

பொதுவாக ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி அவர்களின் முகத்தை நன்கு பொலிவுடன் மற்றும் நன்கு பளபளப்பாகவும் வைத்து கொள்ள வேண்டும் என்று தான் சிந்தனை செய்வார்கள். ஆனால் இன்றைய சூழலில் உலகம் மிகவும் அவசரமாக இயங்கி கொண்டிருக்கிறது. அதனால் நீங்களும் இந்த உலகிற்கேற்ப அவசரமாக தான் இயங்க வேண்டும்.

இந்த நிலையில் எங்கு உங்களுக்கு உங்களின் அழகினை பராமரித்து கொள்வதற்கு நேரம் கிடைக்க போகின்றது. அதனால் இன்றைய சூழலில் யாருமே தங்களின் அழகினை சரியாக பராமரித்து கொள்வதில்லை. அதனால் தான் இன்றைய பதிவில் எளிமையான முறையில் உங்கள் முகத்தை பொலிவு பெற உதவும் ஒரு குறிப்பினை பற்றி விரிவாக காண இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள குறிப்பினை பயன்படுத்தி பயன் பெறுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

How to make Your Skin Glow Naturally at Home in Tamil:

How to make Your Skin Glow Naturally at Home in Tamil

இயற்கையான முறையில் உங்க வீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தி உங்களின் முகத்தை நன்கு பொலிவு படுத்த உதவும் குறிப்பினை பற்றி விரிவாக இங்கு காணலாம். அதற்கு தேவையான பொருட்கள்,

  1. பாதாம் – 12
  2. பால் – 2 டேபிள் ஸ்பூன் 
  3. கற்றாழை ஜெல் – 1 டேபிள் ஸ்பூன் 
  4. மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன் 
  5. தண்ணீர் – தேவையான அளவு

முகம் எப்பொழுதும் பொலிவுடன் இருக்க இந்த 2 டிப்ஸ் மட்டும் போதும்

கிண்ணத்தை எடுத்து கொள்ளவும்:

முதலில் ஒரு கிண்ணத்தை எடுத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 12 பாதாம் மற்றும் தேவையான அளவு தண்ணீரை சேர்த்து  8 முதல் 12 மணி நேரம் ஊற வைத்து கொள்ளுங்கள்.

மிக்சி ஜாரை எடுத்து கொள்ளவும்:

பின்னர் ஒரு மிக்சி ஜாரை எடுத்து அதில் நாம் ஊற வைத்திருந்த 12 பாதாம் மற்றும் 2 டேபிள் ஸ்பூன் பால் ஆகியவற்றை சேர்த்து நன்கு பசை போல் அரைத்து கொள்ளுங்கள். பிறகு அதனை ஒரு கிண்ணத்தில் வடிகட்டி கொள்ளுங்கள்.

உங்க உதடுகள் கோவைப்பழம் போல் சிவப்பாக மாற பாதாம் எண்ணெயுடன் இதை மட்டும் கலந்து தடவுங்க போதும்

கற்றாழை ஜெல்லினை சேர்க்கவும்:

பின்னர் அதனுடன் நாம் எடுத்து வைத்துள்ள 1 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல்லினை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.

மஞ்சள் தூளினை கலக்கவும்:

இறுதியாக அதனுடன் நாம் எடுத்து வைத்துள்ள 1 டீஸ்பூன் மஞ்சள்தூளினை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். பிறகு இதனை ஒரு மூடி போட்ட கண்ணாடி பாத்திரத்தில் சேர்த்து எடுத்து வைத்து கொள்ளுங்கள்.

பின்னர் இதில் இருந்து சிறிதளவு எடுத்து உங்களின் முகத்தில் தடவி 20 முதல் 30 நிமிடங்கள் நன்கு மசாஜ் செய்த பிறகு நன்கு குளிர்ந்த நீரால் உங்களின் முகத்தை கழுவி கொள்ளுங்கள்.

இதனை தினமும் செய்து வருவதன் மூலம் உங்களின் முகம் நன்கு பொலிவு பெறுவதை நீங்களே காணலாம்.

ஒரே வாரத்தில் தலைமுடி உதிர்வை நிறுத்தி முடி நீளமாக வளர வேண்டுமா அப்போ சின்ன வெங்காயத்தை இப்படி பயன்படுத்துங்க

இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> இயற்கை அழகு குறிப்புகள்