நாள் முழுவதும் முகம் பளபளப்பாக
நாள் முழுவதும் முகம் பளபளப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக பார்லருக்கு சென்று அழகுபடுத்தி கொள்வார்கள். அப்படி இல்லையென்றால் கெமிக்கல் நிறைந்த கிரீம்களை வாங்கி பயன்படுத்துகிறார்கள். இதனால் சில நேரம் மட்டும் தான் முகம் பளபளப்பாக இருக்கும். சில நேரத்தில் முகம் பொலிவிழந்து காணப்படும்.
நிரந்தரமாக முகத்தை பளபளப்பாக வைத்து கொள்வதற்கு இயற்கையான முறையை கையாளுவது தான் நல்லது. சில பேர் இயற்கையான முறையை கையாண்டால் ரிசல்ட் கிடைப்பதற்கு நாட்கள் ஆகும் என்று நினைக்கிறார்கள். ஆனால் நாட்கள் ஆனாலும் நிரந்தரமான ரிசல்ட்டையும், ஆரோக்கியமான ரிசல்ட்டையும் பெறலாம். அதனால் இந்த பதிவில் முகம் பளபளப்பாக என்ன செய்ய வேண்டும் என்று அறிந்து கொள்வோம்.
கடலை மாவு:
ஒரு பவுல் எடுத்து அதில் கடலை மாவு 1 தேகரண்டி, மஞ்சள் தூள் 2 தேக்கரண்டி, ரோஸ் வாட்டர் சிறிதளவு சேர்த்து பேஸ்ட்டாக கலந்து கொள்ளவும் . இந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி மசாஜ் செய்து கொள்ள வேண்டும். இதனை அப்படியே 30 நிமிடம் வைத்திருக்க வேண்டும், அதன் பிறகு குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும். இது போல வாரத்தில் மூன்றுநாட்கள் என்று ஒரு மாதத்திற்க்கு செய்து வந்தால் நிரந்தரமாக முகத்தை பளபளப்பாக மாற்றலாம்.
அரிசி மாவு:
ஒரு கிண்ணம் எடுத்து அதில் அரிசி மாவு சிறிதளவு, சந்தன தூள் 2 தேக்கரண்டி சேர்த்து பேஸ்ட்டாக மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும். இதனை 20 நிமிடம் முகத்தில் வைத்திருந்து அதன் பிறகு முகத்தை குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இது போல வாரத்தில் இரண்டு நாட்கள் என்று ஒரு மாதத்திற்க்கு செய்து வந்தால் நிரந்தரமாக முகத்தை பளபளப்பாக மாற்றலாம்.
எங்களுடைய டெலிகிராம் சேனலை பின் தொடர்வதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும் 👉 t.me/pothunalam |
அவசியம் பின்பற்ற வேண்டியது:
நீங்கள் என்ன தான் பேஸ் பேக்குகளை பயன்படுத்தினாலும் சில விஷயங்களை கடைபிடிப்பது அவசியமானது.
முதலில் தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும். நீர் சத்து நிறைந்த பழங்களை சாப்பிட வேண்டும். 7 முதல் 8 மணி நேரம் தூங்குவது அவசியமானது. மன அழுத்தத்தை குறைத்து விட்டு மகிழ்ச்சியாக வைத்து கொள்ளுங்கள்.
கண்ணில் உள்ள கருவளையம் நீங்க கிராமத்து ரெமிடி ட்ரை பண்ணுங்க
இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | இயற்கை அழகு குறிப்புகள் |