முகம் தங்கம் போல் ஜொலிக்க கல்ல மாவுடன் இதை மட்டும் கலந்து தடவுங்க

Advertisement

Face Glowing Gram Flour Pack in Tamil

முன்னடியெல்லாம் ஏதவாது சுப நிகழ்ச்சிக்கு சென்றால் பார்லருக்கு சென்று தங்களின் முகத்தை அழகுபடுத்தி கொள்வார்கள். ஆனால் இப்போதெல்லாம் வாரத்தில் ஒரு நாள் பார்லருக்கு செல்கிறார்கள். காரணம் வேலைக்கு செல்கிறார்கள் இதனால் தங்களின் முகத்தை அழகாக வைத்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறார்கள். அப்படி நீங்கள் பார்லருக்கு சென்று தங்களின் முகத்தை அழகுபடுத்தி கொண்டாலும் சிறிது நேரத்திற்கு மட்டும் தான் முகத்தை பளபளப்பாக வைத்து கொள்வதற்கு உதவுகிறது. அதனால் இந்த பதிவில்  இயற்கையான முறையில் முகத்தை பளபளப்பாக்க என்ன செய்ய வேண்டும் என்று அறிந்து கொள்வோம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

முகத்தை பளபளப்பாக வைத்து கொள்ள:

கடலை மாவ பேக்:1

gram flour face pack in tamil

முகத்தை பளபளப்பாக வைத்து கொள்வதற்கு நம் வீட்டில் உள்ள பொருளான கடலை மாவு மட்டும்போதும். இதனால் எப்படி பயன்படுத்த வேண்டும் என்று அறிந்து கொள்வோம்.

முதலில் ஒரு பவுல் எடுத்துகொள்ளவும். அதில் கடலை மாவு 2 தேக்கரண்டி, எலுமிச்சை சாறு 1 தேக்கரண்டி, தயிர் 1 தேக்கரண்டி சேர்த்து பேஸ்ட்டாக மிக்ஸ் செய்து கொள்ளவும்.

இந்த பேஸ்ட்டை முகத்தில் அப்ளை செய்து 30 நிமிடம் வைத்திருந்து பிறகு முகத்தை கழுவ வேண்டும்.  இது போல நீங்கள் வாரத்தில் ஒரு நாள் என்று தொடர்ந்து ஒரு மாதத்திற்கு செய்து வந்தால் முகத்தை நிரந்தரமாக பளபளப்பாக வைத்து கொள்ள முடியும்.

கடலை மாவ பேக்:2

gram flour face pack in tamil

அடுத்து ஒரு பவுலில் கடலை மாவு 2 தேக்கரண்டி, எலுமிச்சை சாறு1 தேக்கரண்டி, தயிர் 1 தேக்கரண்டி, மஞ்சள் தூள் சிறிதளவு சேர்த்து பேஸ்ட்டாக கலந்து கொள்ளவும்.

இந்த பேஸ்ட்டை முகத்தில் அப்ளை செய்து 30 நிமிடம் வைத்திருந்து பிறகு முகத்தை கழுவ வேண்டும்.  இது போல நீங்கள் வாரத்தில் ஒரு நாள் என்று தொடர்ந்து ஒரு மாதத்திற்கு செய்து வந்தால் முகத்தில் உள்ள பருக்கள், கருப்புப்புள்ளிகள் நீங்கி முகத்தை பளபளப்பாக வைத்து கொள்ள முடியும்.

இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> இயற்கை அழகு குறிப்புகள்

 

Advertisement