Face Glowing Gome Remedy
ஆண்கள், பெண்கள் என இருவருமே கலராக இருந்தாலும் சரி, இல்லையென்றாலும் சரி முகத்தை பளப்பளப்பாக வைத்து கொள்ள வேண்டும் என்று நினைப்பார்கள். இதற்காக கடையில் விற்கும் கிரீம்களையும் வாங்கி பயன்படுத்துவார்கள், சில பேர் பார்லருக்கு சென்றும் தங்களை அழகுபடுத்தி கொள்வார்கள். ஆனால் இது போல் பயன்படுத்துவதால் சில பேருக்கு ரிசல்ட் கொடுக்கும், சில பேருக்கு ரிசல்ட்டை தராது. அதனால் தான் இந்த பதிவில் வீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தி முகத்தை பளபளப்பாக வைத்து கொள்வது எப்படி என்று தெரிந்து கொள்வோம் வாங்க..
முகத்தை பளபளப்பாக வீட்டு குறிப்புகள்:
மஞ்சள்:
மஞ்சள் நம் முகத்தில் ஆன்டி பாக்ட்ரியல் ஆக செயல்படும். இதனால் முகத்தில் உள்ள கிருமிகளை அழித்து முகத்தை பளபளப்பாக மாற்றுவதற்கு உதவுகிறது.
ஒரு கிண்ணத்தில் மஞ்சள் தூள் 1 தேக்கரண்டி, கடலை மாவு 1/2 தேக்கரண்டி, ரோஸ் வாட்டர் சிறிதளவு சேர்த்து பேஸ்ட்டாக சேர்த்து கலந்து கொள்ளவும்.
இந்த பேஸ்ட்டை முகத்தில் அப்ளை செய்வதற்கு முன் முகத்தை நன்றாககழுவி விட்டு காட்டன் துணியை பயன்படுத்தி ஈரம் இல்லாமல் துடைத்து கொள்ளவும். பிறகு செய்து வைத்துள்ள பேஸ்ட்டை முகத்தில் அப்ளை செய்து 20 நிமிடம் வைத்திருந்து பிறகு முகத்தை கழுவ வேண்டும்.
இந்த பேக்கை தினமும் பயன்படுத்தி வந்தால் நிரந்தரமாக முகத்தை பளபளப்பாக மாற்ற முடியும்.
சந்தன தூள்:
ஒரு பவுலில் 1 தேக்கரண்டி சந்தன தூள், 1/2 தேக்கரண்டி அரிசி மாவு, சிறிதளவு ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட்டாக மிக்ஸ் செய்து கொள்ளவும். இந்த பேக்கை முகத்தில் அப்ளை செய்து 20 நிமிடம் வைத்திருந்து பிறகு முகத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இது போல் தொடர்ந்து செய்து வந்தால் முகம் பளபளப்பாக மாற்ற முடியும்.
இவ்ளோ முடி எப்ப வளர்ந்ததுனு எனக்கே தெரியாது.. அப்படினு சொல்ற அளவுக்கு முடி வளர இதை தடவுங்க |
கற்றாழை ஜெல்:
ஒரு கற்றாழையை எடுத்து அதன் தோலை சீவி உள்பகுதியில் இருக்கும் ஜெல்லை மட்டும் எடுத்து கொள்ளவும். இந்த ஜெல்லை குளிர்சாதன பெட்டியில் வைக்கவும். சிறிதுநேரம் கழித்து பார்த்தால் ஐஸ் கட்டியாக மாறியிருக்கும். இதனை எடுத்து முகத்தில் மசாஜ் செய்ய வேண்டும். இப்படி மசாஜ் செய்வதால் முகத்தை எப்பொழுதும் பளபளப்பாக வைத்து கொள்ள முடியும்.
மேலும் முக்கியமாக உங்களுக்கு சளி பிரச்சனை, நுரையீரல் பிரச்சனை, சைனஸ் போன்ற பிரச்சனைகள் இருந்தால் கற்றாழை பேக் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் கற்றாழை குளிர்ச்சி தன்மை உடையது.
உதிர்ந்த முடி அனைத்தும் அடர்த்தியாக வளர இந்த 2 பொருள் போதும் |
இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | இயற்கை அழகு குறிப்புகள் |