உங்க முகம் நிலா போல ஜொலிக்க வேண்டுமா.? அப்போ பப்பாளியை இப்படி பயன்படுத்துங்க..

Advertisement

முகம் நிலா போல் ஜொலிக்க வேண்டுமா.?

பெரும்பாலானவர்கள் பியூட்டி பார்லருக்கு சென்று தங்களின் முகத்தை அழகுபடுத்தி கொள்கிறார்கள். ஆனால் நீங்கள் இப்படி காசு கொடுத்து செலவு செய்தாலும் அவை கொஞ்ச நேரத்திற்கு மட்டும் தான் முகம் பிரகாசமாக இருக்கும். சிறிது நேரத்திலேயே முகம் பொலிவிழந்து காணப்படும். அதனால் இயற்கையான முறையில் முகத்தை பளபளப்பாக்கினால் நிரந்தரமாக முகம் பொலிவாக காணப்படும். அதனால் இந்த பதிவில் முகத்தை பளபளப்பாக என்ன செய்ய வேண்டும் என்று அறிந்து கொள்வோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

முகம் பளபளப்பாக பப்பாளி:

முகம் பளபளப்பாக பப்பாளி

பப்பாளியில் என்சைம்கள் சத்துக்கள் உள்ளன, இவை சருமத்தில் பளபளப்பாக வைத்து கொள்வதற்கு உதவுகிறது. 

இதற்கு பப்பாளி பழத்தை எடுத்து உள்பகுதியில் உள்ள சதை பகுதியை மட்டும் எடுத்து மசித்து கொள்ளவும். இதனை முகத்தில் தடவி 15 நிமிடம் அல்லது 20 நிமிடம் வரை வைத்திருக்க வேண்டும். அதன் பிறகு வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவ வேண்டும்.

இந்த பேக்கை வாரத்திற்கு 2 அல்லது 3 முறை பயன்படுத்தினால் முகம் பளபளப்பாக இருக்கும்.

பால்:

முகம் பளபளப்பாக பால்

பாலில் லாக்டிக் அமிலம் உள்ளது, இவை சருமத்தை வெண்மையாக மாற்றுவதற்கும், பளபளப்பாக வைத்து கொள்வதற்கும் உதவுகிறது. 

ஒரு பவுல் எடுத்து கொள்ளவும், இதனுடன் பால் 1 தேக்கரண்டி, 1 தேக்கரண்டி தேன் சேர்த்து பேஸ்ட்டாக கலந்து கொள்ளவும்.

இந்த பேக்கை முகத்தில் அப்பளை செய்து 15 நிமிடம் முதல் 20 நிமிடம் வரை வைத்திருக்க வேண்டும். அதன் பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.

இந்த பேக்கை வாரத்திற்கு 2 அல்லது 3 முறை பயன்படுத்தினால் முகம் பளபளப்பாக மாறுவதை நீங்களே காணலாம்.

கண்ணில் உள்ள கருவளையங்களை நீக்க தக்காளி சாறு மட்டும் போதுமா.!

கற்றாழை:

முகம் நிலா போல் ஜொலிக்க வேண்டுமா

கற்றாழையில் அழற்சி எதிர்ப்பு மற்றும் ஈரப்பதமூட்டும் பண்புகள் உள்ளன, அவை சருமத்தை ஹைட்ரேட் செய்ய உதவுகிறது. 

1 கற்றாழையை எடுத்து அதன் தோல் பகுதியை சீவி விட்டு உள்பகுதியில் இருக்கும் ஜெல்லிருந்து 1 தேக்கரண்டி எடுத்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ளவும். இதனை முகத்தில் தடவி 15 நிமிடம் அல்லது 20 நிமிடம் வைத்திருக்க வேண்டும்.

அதன் பிறகு வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவ வேண்டும். இந்த பேக்கை வாரத்தில் இரண்டு முறை பயன்படுத்த வேண்டும்.

கற்றாழையானது குளிர்ச்சி தன்மை உடையதால் சளி, இருமல், நுரையீரல் பிரச்சனை போன்ற பிரச்சனை இருப்பவர்கள் இந்த பேக் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> இயற்கை அழகு குறிப்புகள்
Advertisement