முகம் பளபளப்பாக இருக்க என்ன செய்ய வேண்டும்
முகம் எப்போதும் பளபளப்பாக இருக்க வேண்டும் என்று தான் நினைக்கின்றனர். இதற்காக பல முறைகளில் ட்ரை செய்திருப்பீர்கள். ஆனால் அவையாவும் அப்போது வேண்டுமானால் முகத்தை பளபளப்பாக காட்சியளிக்கும். நேரம் கழித்தும் முகம் பொலிவிழந்து போகிவிடும். அதனால் நிரந்தரமான முக பொலிவை பெற வேண்டுமென்றால் இயற்கையான முறையை கையாள வேண்டும். அது போல நம் முன்னோர்கள் முக அழகிற்காக நிறைய ரெமிடிகளை கூறுவார்கள். ஆனால் நாம் அதை பயன்படுத்தி கொள்ள மாட்டோம். இதற்கு மாறாக கெமிக்கல் நிறைந்த கிரீம்களை வாங்கி அப்ளை செய்வோம். அதனால் இந்த பதிவில் முகம் எப்போதும் பளபளப்பாக இருக்க பாட்டி சொன்ன ரகசியத்தை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
முகம் பளபளப்பாக இருக்க பாட்டி வைத்தியம்:
தினமும் பின்பற்ற வேண்டியவை:
நன்றாக தூங்க வேண்டும். அதாவது குறைந்தது 8 மணி நேரம் தூங்க வேண்டும். அப்போது தான் முகத்தை பளபளப்பாக வைத்து கொள்ள முடியும்.
தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும், குறைந்தது 2 லிட்டர் தண்ணீராவது குடிக்க வேண்டும். தண்ணீர் அதிகமாக குடிப்பதால் தான் நம் முகத்தில் உள்ள கிருமிகளை அகற்றி செல்களை புத்துணர்ச்சி பெற உதவுகிறது.
ஏதாவது ஒரு உடற்பயிற்சி அல்லது யோகா செய்ய வேண்டும். உடற்பயிற்சி செய்வதனால் உடல் எடை குறைவதோடு மட்டுமில்லாமல் உடலை அழகாகவும், பளபளப்பாகவும் வைத்து கொள்ள உதவுகிறது.
மன அழுத்தத்தில் இருக்காதீர்கள், மன அழுத்தத்தில் இருக்கும் போது முகத்தில் பருக்கள் ஏற்படும். அதனால் மன அழுத்தத்தில் இருக்கும் போது அதிலிருந்து விடுபடுவதில் ஈடுபட வேண்டும்.
என்னா பாட்டி அப்புடியா முகப்பரு மறைய இதை செஞ்சா போதுமா
தூங்குவதற்கு முன்பு முகத்தை கழுவி விட்டு வந்து தூங்க வேண்டும்.
மேல் கூறப்பட்டுள்ள அனைத்தையும் பின்பற்றி கீழ் குறிப்புகளில் ஏதவாது ஒன்றை பயன்படுத்தினாலே முகத்தை பளபளப்பாக வைத்து கொள்ள முடியும்.
கற்றாழை:
கற்றாழையானது முகத்தை ஈரப்பதமாக வைத்து கொள்வதற்கு உதவுகிறது, மேலும் சருமத்தின் உள்ள சுருக்கங்களை நீக்கி வயதான தோற்றத்தை நீக்குகிறது. மேலும் முகப்பருக்கள் வராமலும் தடுக்கிறது.
கற்றாழையை எடுத்து தோலை சீவி அதன் உள்பகுதியில் இருக்கும் ஜெல்லை மற்றும் எடுத்து கொள்ளவும். இந்த ஜெல்லை நீங்கள் முகத்தில் அப்ளை செய்து 1/2 மனை நேரம் வைத்திருந்து பிறகு முகத்தை கழுவ வேண்டும்.
கிரீன் டீ:
கிரீன் டீ குடிப்பதற்கு மட்டுமில்லை சருமத்திற்கு உதவுகிறது. கிரீன் டீயானது முகத்தை சூரிய ஓளியில் இருந்து பாதுகாத்து புற்றுநோய் வராமல் பாதுகாப்பதற்கு உதவுகிறது.
கிரீன் டீயை 1/2 கப் தண்ணீரும் கொடுக்க வைக்க வேண்டும். கொதித்த தண்ணீரானது ஆறிய பிறகு சர்க்கரை சேர்த்து பேஸ்ட்டாக கலந்து கொள்ளவும். இந்த பேக்கை முகத்தில் அப்ளை செய்து 1/2 மணி நேரம் வைத்திருந்து பிறகு முகத்தை கலாவை வேண்டும்.
உங்கள் முகம் எப்போதும் பொழிவுடன் இருக்க வேண்டுமா…அப்படி என்றால் இதனை செய்து பாருங்கள்…
கரும்புள்ளி மறைய பாட்டி சொன்னது இது தான் ட்ரை பண்ணி பாருங்க..
இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | இயற்கை அழகு குறிப்புகள் |