முகத்தில் முடி நீங்க பாட்டி வைத்தியம்
பொதுவாக பலருக்கும் தலையில் முடி சரியாக வளரவில்லை என்றும் முகம் பொலிவிழந்து முகப்பருக்களுடன் காணப்படுகிறது என்ற கவலை தான் இருக்கும். ஆனால் மற்ற சிலருக்கு இதுபோன்ற குழப்பங்கள் இல்லாமல் முகத்தில் தேவையற்றதாக இருக்கும் முடியினை எவ்வாறு நீங்க செய்வது என்று பிரச்சனை காணப்படும். ஏனென்றால் அழகாக இருக்கும் நமது முகத்தில் தேவையில்லாமல் முடி வளர்ந்து இருந்தால் அது நமது முக அழகினை கெடுத்து விடும். இத்தகைய பிரச்சனையினை எப்படியாவது சரி செய்ய வேண்டும் என்று பலரும் பல விதமான கிரீம்களை வாங்கி பயன்படுத்துவார்கள். அதன் பிறகு இதில் எந்த விதமான பலனும் கிடைக்கவில்லை என்றும் புலம்புவார்கள். அதனால் இன்று பெண்களின் முகத்தில் இருக்கும் தேவையில்லாத முடிகளை நீக்க பாரம்பரியமாக பாட்டி சொன்ன வைத்தியம் என்ன என்று பார்க்கலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
Mugathil Ulla Mudi Neenga:
முகம் தான் ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி மேலும் அழகு சேர்க்கக்கூடிய ஒன்றாக இருக்கிறது. அந்த வகையில் நாம் அன்றாடம் பராமரித்து வரும் முகத்தில் சில தேவையில்லாத முடிகள் வந்து விடும்.
இவ்வாறு வரும் முடியினை நீக்குவதற்கு பாட்டி சொன்ன வைத்தியத்தை தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..!
- புளிக்காத தயிர்- 2 ஸ்பூன்
- கடலை மாவு- 1/2 ஸ்பூன்
- கஸ்தூரி மஞ்சள்- 1/2 ஸ்பூன்
செலவு செய்யாமல் வெள்ளை முடியை கருப்பாக மாற்ற பாட்டி வைத்தியம்..
முகத்தில் முடி நீங்க:
முதலில் ஒரு பவுலை எடுத்துக்கொள்ள வேண்டும். அதன் பிறகு பவுலில் 2 ஸ்பூன் தயிர் மற்றும் 1/2 ஸ்பூன் கடலை மாவினை சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். கடலை மாவு மற்றும் தயிரின் கலவை ஆனது முகத்தில் இருக்கும் முடிகள் நீங்க சிறந்த கலவை.
பின்பு கலந்து வைத்துள்ள பேஸ்டுடன் 1/2 ஸ்பூன் கஸ்தூரி மஞ்சள் சேர்த்து மீண்டும் ஒரு 10 நிமிடம் வரை கலந்துக் கொள்ள வேண்டும். இப்போது முகத்தில் இருக்கும் முடிகளை நீக்கக்கூடிய பேக் தயார்.
முகத்தில் பயன்படுத்தும் முறை:
அடுத்து தயார் செய்து வைத்துள்ள Face பேக்கினை முகத்தில் நன்றாக முடி இருக்கும் இடத்தில் அப்ளை செய்து கொள்ள வேண்டும். அப்ளை செய்த Face பேக்கினை முகத்தில் அப்படியே 10 நிமிடம் வைக்க வேண்டும்.
10 நிமிடம் கழித்து பார்த்தால் Face பேக் காய்ந்து போய்விடும். அதன் பிறகு மீதம் இருக்கும் Face பேக்கினை அப்ளை செய்து காய விடுங்கள்.
முகத்தில் இருக்கும் Face பேக் நன்றாக காய்ந்த பிறகு உங்களின் இரு கைகளாலும் ஸ்கரப் செய்து விட்டு பின்பு முகத்தை சோப் போட்டு கழுவி விடுங்கள்.
இவ்வாறு செய்தால் போதும் முகத்தில் இருக்கும் முடி கொட்டியதோடு மட்டும் இல்லாமல் மீண்டும் முடியும் வராது.
தலையில் உதிர்ந்த முடி மீண்டும் வளர பாட்டி சொன்ன வைத்தியம் என்ன தெரியுமா
இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | இயற்கை அழகு குறிப்புகள் |