Face Open Pores Home Remedy
பெண்களாக இருந்தாலும் சரி, ஆண்களாக இருந்தாலும் சரி அழகாக இருக்க வேண்டும் என்று நினைக்கின்றனர். அதற்காக பல கிரீம்களையும் பயன்படுத்துகின்றனர். இருந்தாலும் முகத்தில் பருக்கள் வந்து முகத்தின் அழகை கெடுக்கின்றன. பருக்கள் நாளடைவில் கரும்புள்ளிகளாகவும், பள்ளங்களாகவும் மாறுகின்றன. இதனை சரி செய்வதற்காக நீங்கள் கெமிக்கல் நிறைந்த பொருட்களை பயன்படுத்தாமல் இயற்கையான முறையில் முகத்தில் உள்ள பள்ளங்களை மறைக்க என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்து கொள்வோம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl
முகத்தில் உள்ள பள்ளங்களை மறைக்க:
முட்டையின் வெள்ளை கரு:
ஒரு பாத்திரத்தில் முட்டையின் வெள்ளை கரு, ஓட்ஸ் சிறிதளவு, எலும்பிச்சை சாறு 2 தேக்கரண்டி சேர்த்து மிக்ஸ் செய்து கொள்ளவும். இந்த பேக்கை முகத்தில் அப்ளை செய்து 10 நிமிடம் வைத்திருந்து முகத்தை கழுவி விடவும்.
மஞ்சள்:
ஒரு பவுலில் 1 தேக்கரண்டி மஞ்சள் தூள், 1 தேக்கரண்டி ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த பேக்கை முகத்தில் அப்ளை செய்து 15 நிமிடம் வைத்திருந்து பிறகு குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும்.
வேப்பிலை:
வேப்பிலை இலைகளை அரைத்து பேஸ்ட்டாக வைத்து கொள்ளவும். இந்த பேஸ்ட்டை முகத்தில் அப்ளை செய்து 20 நிமிடம் வைத்திருந்து பிறகு முகத்தை கழுவ வேண்டும். வேப்பிலையை அரைக்க முடியவில்லை என்றால் வேப்பிலை இலைகளை கசக்கினாலே அதிலிருந்து சாறு வரும். அதை முகத்தில் அப்ளை செய்தாலே போதுமானது.
இந்த கோடையிலும் முகத்தை பளபளன்னு வைத்து கொள்ள இதை மட்டும் செய்யுங்க..
வேப்பிலையில் கார்போஹைட்ரேட்டுகள், கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின் சி போன்ற சத்துக்கள் இருப்பதால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள், பள்ளங்கள் போன்றவற்றை சரி செய்ய உதவுகிறது.கற்றாழை ஜெல்:
கற்றாழை ஜெல்லை மட்டும் எடுத்து பிரிட்ஜில் 2 மணி நேரம் வைத்திருக்கவும். பிறகு ஐஸ் பேக்காக வந்திருக்கும், இதை பயன்படுத்தி முகத்தில் 10 நிமிடத்திற்கு மசாஜ் செய்யவும். பிறகு குளிர்ந்த நீரால் முகத்தை கழுவ வேண்டும்.
கற்றாழை ஜெல் முகத்தை ஈரப்பதமாக வைத்து பள்ளங்கள் மற்றும் கரும்புள்ளிகளை நீக்க உதவுகிறது.
ஐஸ்கட்டி:
ஐஸ்கட்டியை பயன்படுத்தி முகத்தில் 10 நிமிடத்திற்கு மசாஜ் செய்யவும், இல்லையென்றால் ஐஸ் தண்ணீரை பயன்படுத்தி முகத்தை கழுவலாம். ஐஸ் சருமத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. இரத்த ஓட்டத்தையும் அதிகப்படுத்துகிறது.
மேல் கூறப்பட்டுள்ள குறிப்புகளில் ஏதவாது ஒன்றை தினமும் தொடர்ந்து செய்து வந்தாலே முகத்தில் கரும்புள்ளிகள், பள்ளங்கள் மறைந்து முகம் அழகாக இருக்கும்.
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |