Pimples on Face Treatment at Home
நம்முடைய முகத்தில் ஒரு பருக்கள் வந்தால் கூட அதன் கூடவே நமக்கு கவலைகளும் வந்து விடும். ஏனென்றால் பருக்கள் வந்தால் முகம் அப்படியே வீணாகி போய்விடும் என்பது நமக்கு தெரிந்த ஒன்று. முதலில் பருக்கள் வரும் அதன் பின்பு பருக்கள் மறைந்து கரும்புள்ளிகள் வரும். அதனால் பருக்கள் முகத்தில் வந்தால் அதனை ஆரம்பத்திலேயே சரி செய்து விட்டு முகம் நீங்கள் நினைத்த மாதிரி அழகாகவும், பளிச்சென்றும் இருக்கும். அதனால் இன்று முகத்தில் இருக்கும் பருக்களை எவ்வாறு மறைய வைப்பது என்று பார்க்கலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
முகத்திற்கு மஞ்சள்:
பொதுவாக மஞ்சள் ஆனது அலர்ஜி எதிர்ப்பு பண்பை கொண்டுள்ளது. மேலும் பாக்ட்ரியாக்களை எதிர்த்து போராடும் பண்பை கொண்டுள்ளது. அதனால் ஒரு பவுலில் 1 தேக்கரண்டி தேன், அதனுடன் 1/2 தேக்கரண்டி மஞ்சள் சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த பேக்கை பருக்களின் மீது தடவி 5 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவ வேண்டும்.
முல்தானி மெட்டி அழகு குறிப்புகள்:
முல்தானி மெட்டியில் மெக்னீசியம் குளோரைடு நிறைந்துள்ளது. ஆகையால் இது பருக்களை அகற்ற உதவுகிறது. மேலும் சருமத்தில் உள்ள அழுக்குகளை நீக்க உதவுகிறது.
முதலில் ஒரு பவுலில் 1/2 தேக்கரண்டி முல்தானி மெட்டி, தண்ணீர் அல்லது ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த பேக்கை முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து முகத்தை கழுவ வேண்டும்.
தேங்காய் எண்ணெயில் இந்த பொருளை கலந்து தலையில் தடவி பாருங்க.. |
ரோஸ் வாட்டர் உபயோகிக்கும் முறை:
ரோஸ் வாட்டர் ஆனது முகத்தில் இருக்கும் பருக்களை நிரந்தரமாக மறைய வைப்பதற்கு சிறந்த ஒன்றாக உள்ளது. அதுமட்டும் இல்லாமல் அலர்ஜி எதிர்ப்பு பண்புகளை எதிர்த்து போராடி பருக்களை குறைக்கவும் பயன்படுகிறது.
ஆகையால் காலை மற்றும் மாலை இருவேளையும் முகத்தில் ரோஸ் வாட்டரை அப்ளை செய்யவும்.
உளுந்து முகத்திற்கு:
அன்றாடம் நம்முடைய வீட்டில் சமையலுக்காக கொண்டைக்கடலை மற்றும் உளுந்தினை பயன்படுத்தி வருகிறோம். அந்த வகையில் இந்த இரண்டினையும் பொடியாக செய்து முகத்திற்கு அப்ளை செய்வதன் மூலம் முகப்பருக்கள் மறைந்து விடும்.
அதனால் 1 ஸ்பூன் உளுந்து மாவு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போல் கலந்து கொள்ளவும். இந்த பேக்கை பருக்களின் மீது தடவி 10 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவ வேண்டும்.
ஒரே வாரத்தில் கொட்டிய இடத்தில் எல்லாம் புதிய முடி வளர இதை மட்டும் ட்ரை பண்ணுங்க |
எலுமிச்சை சாறு முகத்தில்:
எலுமிச்சையில் வைட்டமின் C, சிட்ரிக் அமிலம் நிறைந்துள்ளதால் சருமத்தை பளிச்சென்றும், முகப்பருவை நீக்குவதற்கும் பயன்படுகிறது.
எனவே எலுமிச்சை சாற்றை முகத்தில் தடவி 10 நிமிடம் கழித்து முகத்தை கழுவ வேண்டும்.
மேல் கூறியுள்ள 5 குறிப்புகளில் ஏதேனும் ஒன்றை நீங்கள் பயன்படுத்தி முகத்தில் காணப்படும் பருக்களை மறைய வைக்கலாம்.
இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | இயற்கை அழகு குறிப்புகள் |