முகத்தில் இருக்கும் பருக்கள் மறைய இதை ட்ரை பண்ணுங்க..!

Advertisement

Remove Pimples Face Home Remedies

பெண்களாக இருந்தாலும் சரி ஆண்களாக இருந்தாலும் சரி முகத்தின் அழகினை கெடுப்பது என்றால் அது முகப்பருக்கள் தான். முகத்தில் பருக்கள் வந்தாலே அது நமது சருமத்தினை மாற்றி விடுகிறது. இப்படிப்பட்ட பருக்களை நீக்குவது என்பது ஒரு பெரிய சவாலாகவே அனைவருக்கும் இருக்கிறது. அதனால் இன்று மிகவும் எளிய முகத்தில் இருக்கும் பருக்களை மறைய வைப்பது எப்படி என்று விரிவாக தெரிந்துக்கொள்ளலாம் வாருங்கள்..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👉 https://bit.ly/3Bfc0Gl

முகத்தில் உள்ள பருக்கள் மறைய:

குறிப்பு- 1

வெள்ளரிக்காய் அழகு குறிப்பு

பருக்கள் வருவதற்கு முதல் காரணமாக இருப்பது முகத்தில் இருக்கும் எண்ணெய் பசை தான். அதனால் வெள்ளரிக்காயினை முகத்திற்கு பயன்படுத்துவதன் மூலம் அதில் உள்ள வைட்டமின் A, C மற்றும் E  சத்துக்கள் ஆனது எண்ணெய் பசையினை நீக்கி முகத்தினை பளிச்சென்று வைக்க செய்கிறது.

அதனால் ஒரு வெள்ளரிக்காயினை எடுத்துக்கொண்டு அதன் தோலை நீக்கி விட்டு மிக்சி ஜாரில் சேர்த்து நன்றாக பேஸ்ட் பதத்திற்கு அரைத்து கொள்ள வேண்டும். இப்போது வெள்ளரிக்காய் பேஸ்ட் தயார்.

பயன்படுத்தும் முறை:

தயார் செய்து வைத்துள்ள வெள்ளரிக்காய் பேஸ்ட்டினை முகத்தில் நன்றாக அப்ளை செய்து விட்டு பின்பு முகத்தை குளிர்ந்த நீரினால் கழுவி விடுங்கள். இவ்வாறு செய்வதன் மூலம் முகத்தில் இருக்கும் பருக்கள் விரைவில் மறைய தொடங்கிவிடும்.

இவ்ளோ முடி எப்ப வளர்ந்ததுனு எனக்கே தெரியாது.. அப்படினு சொல்ற அளவுக்கு முடி வளர இதை தடவுங்க

குறிப்பு- 2

உருளைக்கிழங்கு முகத்தில்

முகத்திற்கு கடலை மாவு பயன்படுத்துவதன் மூலம் அதில் உள்ள சத்துக்கள் யாவும் முகத்தில் இருக்கும் பருக்கள், கரும்புள்ளிகள் என அனைத்தினையும் நீக்கி முகத்தை பருக்கள் இல்லாமல் பளிச்சென்று வைக்க உதவுகிறது.

அதனால் தோல் நீக்கி உருளைக்கிழங்கினை எடுத்துக்கொண்டு மிக்சி ஜாரில் சேர்த்து பேஸ்ட் போல அரைத்து கொள்ள வேண்டும்.

இப்போது ஒரு பவுலில் உருளைக்கிழங்கு பேஸ்ட், சிறிதளவு தயிர் மற்றும் கடலை மாவு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். அவ்வளவு தான் Face பேக் தயார்.

பயன்படுத்தும் முறை:

முதலில் உங்களுடைய முகத்தினை சுத்தமாக துடைத்து கொள்ளுங்கள். அதன் பிறகு தயார் செய்து வைத்துள்ள Face பேக்கினை முகத்தில் அப்ளை செய்து விட்டு 20 நிமிடம் கழித்து முகத்தை கழுவி விடுங்கள்.

இவ்வாறு செய்வதன் மூலம் முகத்தில் உள்ள பருக்கள் நீங்கி முகம் பளிச்சென்று மாறிவிடும்.

மேலே சொல்லப்பட்டுள்ள குறிப்புகளில் ஏதேனும் ஒன்றை மட்டும் பயன்படுத்துங்கள்.

உதிர்ந்த முடி அனைத்தும் அடர்த்தியாக வளர இந்த 2 பொருள் போதும்

இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> இயற்கை அழகு குறிப்புகள்
Advertisement