பருக்களை நிரந்தரமாக அகற்றுவது எப்படி.?
மனிதர்களாக பிறந்த அனைவரும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரியான நிறத்தையும், தோற்றம் உடையவர்களாக இருப்பார்கள். அதிலும் முகத்தில் ஏற்படவும் பருக்கள் மற்றும் கரும்புள்ளி பெரும் பிரச்சனையாக இருக்கிறது. இதனை சரி செய்வதற்காக பல குறிப்புகளை பயன்படுத்துவார்கள். இருந்தாலும் சில நபர்களுக்கு ரிசல்ட் கொடுத்திருக்கும், சில நபர்களுக்கு ரிசல்ட்டை கொடுத்திருக்காது. அதனால் தான் இந்த பதிவில் வீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தி பருக்களை நீக்குவது எப்படி என்று தெரிந்து கொள்வோம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👉 https://bit.ly/3Bfc0Gl |
வீட்டில் உள்ள பொருளை பயன்படுத்தி பருக்களை நீக்குவது எப்படி.?
சந்தனம்:
ஒரு பவுலில் சந்தனம், கஸ்தூரி மஞ்சள் தூள் சிறிதளவு, கொத்தமல்லி இலை சாறு சேர்த்து மிக்ஸ் செய்து கொள்ளவும்.
இந்த பேக்கை முகத்தில் அப்ளை செய்வதற்கு முன் முகத்தை நன்றாக கழுவி விட்டு காட்டன் துணியை பயன்படுத்தி ஈரம் இல்லாமல் துடைத்து எடுத்து கொள்ளவும்.
பிறகு செய்து வைத்துள்ள பேக்கை முகத்தில் அப்ளை செய்து 1/2 மணி நேரம் வைத்திருந்து பிறகு முகத்தை கழுவி கொள்ளவும்.
இவ்ளோ முடி எப்ப வளர்ந்ததுனு எனக்கே தெரியாது.. அப்படினு சொல்ற அளவுக்கு முடி வளர இதை தடவுங்க |
பிறகு ஐஸ் கட்டியை பயன்படுத்தி முகத்தில் 15 நிமிடத்திற்கு மசாஜ் செய்யவும். ஐஸ் கட்டியை பயன்படுத்துவதன் மூலம் முகத்தில் பருக்களால் ஏற்பட்டால் வலி மற்றும் எரிச்சல் தன்மை இல்லாமல் இருக்கும்.
கற்றாழை:
கற்றாழையை முகத்தில் பயன்படுத்துவதன் மூலம் முகத்தில் உள்ள பருக்கள், கரும்புள்ளிகளை நீக்க உதவுகிறது.
முதலில் முகத்தை வெந்நீரை பயன்படுத்தி முகத்தை கழுவி கொள்ளவும். பிறகு கற்றாழையில் உள்பகுதியில் உள்ள ஜெல்லை மட்டும் எடுத்து கொள்ளவும். இந்த ஜெல்லை முகம் முழுவதும் தடவி கொள்ளவும். 1/2 மணி நேரம் கழித்து முகத்தை கழுவி கொள்ளவும். இந்த பேக்கை வாரத்தில் ஒரு நாள் என்று தொடர்ந்து செய்து வந்தால் முகப்பருக்களை நிரந்தரமாக சரி செய்யலாம்.
உதிர்ந்த முடி அனைத்தும் அடர்த்தியாக வளர இந்த 2 பொருள் போதும்
இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | இயற்கை அழகு குறிப்புகள் |