ஒரு நாளில் பருக்கள் மறையை வேப்பிலையுடன் இந்த ஒரு பொருள் போதும்..

Advertisement

பருக்கள் மறைய 

நமது முகத்தை அழகாக வைத்து கொள்ள வேண்டும் என்று தான் நினைக்கிறோம். ஆனால் சுற்றுசூழல் மாசுபாடு காரணமாக நம் முகத்தில் பருக்கள் வந்து விடுகிறது. இதனை சரி செய்வதற்கு கெமிக்கல் நிறைந்த பொருட்களை பயன்படுத்துவோம். நீங்கள் கெமிக்கல் நிறைந்த பொருட்களை பயன்படுத்துவதற்கு முன்பு தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும். அடுத்து முகத்தில் பரு வந்தால் அதனை கையை வைத்து கிள்ளி விட கூடாது. ஒரு முறை கிள்ளி விட்டால் வேறொரு இடத்தில் மறுபடியும் பரு வந்துவிடும். இந்த பதிவில் இயற்கையான முறையில் பருக்களை சரி செய்வது எப்படி என்று தான் தெரிந்து கொள்ள போகின்றோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

பருக்கள் மறைய வேப்பிலை:

பருக்கள் மறைய 

முதலில் வேப்பிலை இலைகளை உங்கள் முகத்திற்கு தேவையான அளவு பறித்து கொள்ளவும். அதனை நன்றாக கழுவி விடவும்.

அடுத்து பச்சை மஞ்சளை ஒரு சிறிய துண்டு எடுத்து கொள்ளவும், இந்த இரண்டு பொருட்களையும் பேஸ்ட்டாக அரைத்து கொள்ளவும்.

இந்த பேஸ்ட்டை இரவு தூங்குவதற்கு முன்பு முகத்தில் அப்பளை செய்து அப்படியே தூங்கவும். மறுநாள் காலையில் எழுந்து முகத்தை கழுவி விடவும். இது போல நீங்கள் தொடர்ந்து செய்து வந்தால் முகத்தில் உள்ள பருக்கள் மட்டுமில்லை கரும்புள்ளி, ஆயில் வலிவது போன்றவை சரியாகிவிடும்.

வேப்பிலை மற்றும் மஞ்சள் ஆன்டி பாக்ட்ரியாவாக செயல்படுகிறது. அதனால் உங்க முகத்தில் உள்ள பருக்களை சரி செய்ய உதவுகிறது.

உங்களுடைய வயதை 10 வருடம் குறைத்து காட்ட வேண்டுமா.!

பருக்கள் மறைய கற்றாழை:

பருக்கள் மறைய 

கற்றாழையை எடுத்து தோல் பகுதியை சீவி உள்பகுதியில் இருக்கும் ஜெல்லை மட்டும் எடுத்து கொள்ளவும். இந்த ஜெல்லுடன் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து பேஸ்ட்டாக கலந்து கொள்ளவும்.

இந்த பேஸ்ட்டை முகத்தில் அப்ளை செய்து 20 நிமிடம் கழித்து முகத்தை கழுவி விட வேண்டும்.

இந்த பேக்கை சளி பிரச்சனை, நுரையீரல் பிரச்சனை உள்ளவர்கள் இதனை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் கற்றாழையானது குளிர்ச்சி தன்மை வாய்ந்தது. அதனால் நீங்கள் இதனை பயன்படுத்தினால் உங்களின் பிரச்சனையை அதிகப்படுத்தும்.

இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> இயற்கை அழகு குறிப்புகள்
Advertisement