ஒரே நாளில் பருக்கள் மறைய மஞ்சளுடன் இதை சேர்த்து தடவுங்க..

Advertisement

முகப்பரு நீங்க 

இன்றைய காலத்தில் உள்ள சுற்றுசூழல் மாசுபாடு காரணமாக முகத்தில் பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. அதில் ஒன்று தான் முகப்பரு. முகப்பருக்கள் வந்தாலே அதனை எப்படி சரி செய்வது என்று யோசித்து கொண்டே இருப்பார்கள். அதிலும் பெரும்பாலானவர்கள் இயற்கையானதை தேர்ந்தெடுக்காமல் கடையில் விற்கும் கெமிக்கல் நிறைந்த கிரீம்களை வாங்கி அப்ளை செய்கின்றனர். இதனால் முகம் மற்றும் ஆரோக்கியத்தில் பல பிரச்சனைகள் ஏற்படும். அதனால் தான் இன்றைய பதிவில் இயற்கையான முறையில் முகப்பருக்களை சரி செய்வது எப்படி என்று அறிந்து கொள்வோம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

முகப்பரு நீங்க மஞ்சள் மற்றும் வேப்பிலை:

முகப்பரு நீங்க 

நம் முன்னோர்களின் காலத்தில் பருவம் அடைந்த பெண்கள் முகத்தில் மஞ்சள் தேய்த்து குளிப்பார்கள். மஞ்சள் ஆன்டி பாக்ட்ரியாவாக செயல்படும். அதனால் தான் நம்முடைய பாட்டிகளுக்கெல்லாம் முகத்தில் எந்த பிரச்சனையும் இல்லாமல் சருமம் பொலிவாக இருந்தது.

பச்சை மஞ்சள் மற்றும் வேப்பிலை சிறிதளவு சேர்த்து பேஸ்ட்டாக அரைத்து கொள்ளவும். இதனை முகத்தில் அப்ளை செய்து 1 மணி நேரம் வைத்திருந்து அதன் பிறகு முகத்தை கழுவ வேண்டும்.

இந்த பேக்கை வாரத்தில் ஒரு நாள் என்று தொடர்ந்து அப்ளை செய்து வந்தால் முகத்தில் உள்ள பருக்கள் மற்றும் தழும்புகள் மறைந்து விடும்.

கண்ணில் உள்ள கருவளையங்களை நீக்க தக்காளி சாறு மட்டும் போதுமா.!

முகப்பரு நீங்க ரோஸ் வாட்டர் மற்றும் மஞ்சள்:

முகப்பரு நீங்க 

ஒரு பவுல் எடுத்து அதில் பச்சை மஞ்சளை பேஸ்ட்டாக அரைத்து 2 தேக்கரண்டி எடுத்து கொள்ளவும். அதனுடன் 1 தேக்கரண்டி ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட்டாக கலந்து கொள்ளவும்.

இந்த பேக்கை முகத்தில் அப்ளை செய்து 1/2 மணி நேரம் வைத்திருக்க வேண்டும். அதன் பிறகு குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும்.

இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> இயற்கை அழகு குறிப்புகள்
Advertisement