முகத்தில் உள்ள பருக்கள் நீங்க
பொதுவாக தங்களின் முகத்தை அழகாக வைத்து கொள்ள வேண்டும் என்று தான் அனைவரும் நினைக்கின்றோம். ஆனால் முகத்தில் பருக்கள் வந்து பிரச்சனையை உண்டாக்குகிறது. தண்ணீர் போதுமான அளவு குடிக்காமல் இருப்பது, மன அழுத்தம், கவலை, உணவு முறை போன்றவற்றால் பருக்கள் ஏற்படுகிறது. முதலில் பருக்கள் வந்தால் அதனை கைகளை வைத்து கிள்ள கூடாது, அதன் பிறகு அவை மற்ற இடத்திற்கும் பரவி விடும், மேலும் அவை கருப்புள்ளிகளாக மாறி விடும். தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும். இவற்றை சரியாக செய்த பிறகு முகத்தில் உள்ள பருக்களை நீக்குவதற்கு இயற்கையான முறையில் 3 பேஸ் பேக்கை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
பருக்களை நீக்க பேஸ் பேக்:
Charcoal Powder For Face:
முதலில் அடுப்பை எரித்து கரி துண்டு இருக்கும் அல்லவா அதை ஒரு துண்டு எடுத்து தூளாக அரைத்து கொள்ளவும்.
அடுத்து ஒரு பவுல் எடுத்து கொள்ளவும். அதில் 2 தேக்கரண்டி கரி தூள், 1 ஸ்பூன் கற்றாழை ஜெல், தேயிலை மர எண்ணை 1 சொட்டு சேர்த்து கலந்து கொள்ளவும். இதனை முகம் முழுவதும் அப்ளை செய்து 15 நிமிடம் வைத்திருந்து பிறகு குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும்.
Rice Flour Face Pack:
ஒரு கிண்ணத்தில் அரிசி மாவு 1 ஸ்பூன், எலுமிச்சை சாறு 1 ஸ்பூன், தேன் ஒரு சொட்டு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
இந்த பேக்கை முகத்தில் தடவி 15 நிமிடம் வைத்திருந்து பிறகு முகத்தை கழுவ வேண்டும். இது போல் வாரத்தில் ஒரு நாள் என்று ஒரு மாதத்திற்கு செய்ய வேண்டும்.
அரிசி மாவானது முகத்தில் உள்ள பருக்களை நீக்கி முகத்தை பளபளப்பாக வைத்து கொள்வதற்கு உதவுகிறது.
Orange Peel Face Pack:
ஆரஞ்சு தோலை காய வைத்து அதனை பவுடராக அரைத்து கொள்ளவும். அடுத்து ஒரு பவுல் எடுத்து கொள்ளவும், அதில் ஆரஞ்சு தோல் பவுடர், 2 தேக்கரண்டி ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த பேக்கை முகத்தில் அப்ளை செய்து 20 நிமிடம் வைத்திருக்க வேண்டும். பிறகு முகத்தை கழுவ வேண்டும். இது போல் வாரத்தில் ஒரு நாள் செய்து வந்தால் விரைவில் முகத்தில் உள்ள பருக்கள் மறைந்து முகம் பளபளப்பாக காட்சியளிக்கும்.
இந்த பேக்கை தடவுனா இது நம்ம முகமா அப்படின்னு நீங்களே ஆச்சரியப்படுவீங்க..
இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | இயற்கை அழகு குறிப்புகள் |