இயற்கையான முறையில் முக பருக்களை நீக்குவது எப்படி.?

Advertisement

Face Pimples Treatment at Home

முகத்தில் பருக்கள் ஏற்பட்டாலே அதனை எப்படியாவது சரி செய்ய வேண்டும் என்று நினைப்பார்கள். இதற்காக எல்லா கிரீம்களையும் வாங்கி பயன்படுத்துவார்கள். இதனை சரி செய்ய வேண்டும் என்பதற்காக எல்லா கிரீம்களையும் பயன்படுத்துகிறவர்கள் நிரந்தரமாக சரி செய்ய வேண்டும் என்று நினைப்பதில்லை. ஒரு பரு வந்து விட்டால் அந்த இடத்திலே கை வைத்து கொண்டே இருந்தால் மறுபடியும் முகத்தில் பருக்கள் அதிகமாக தான் வரும். அதனால் தான் பருவை இயற்கையான முறையில் நிரந்தரமாக பருவை எப்படி நீக்குவது என்று தெரிந்து கொள்வோம் வாங்க..

இயற்கையான முறையில் பருக்களை நீக்குவது எப்படி.?

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

கற்றாழை பேஸ் பேக்:

face pimples treatment at home in tamil

ஒரு பவுலில் ஒரு தேக்கரண்டி கரி தூள், 1 தேக்கரண்டி கற்றாழை ஜெல், 1 தேக்கரண்டி தேயிலை எண்ணெய் சேர்த்து மிக்ஸ் செய்து கொள்ளவும். இந்த பேக்கை முகத்தில் அப்ளை செய்து 15 நிமிடம் வைத்திருந்து பிறகு முகத்தை கழுவ வேண்டும்.

கற்றாழையில் ஆன்டி ஆக்சிடென்ட் இருப்பதால் முகத்தில் உள்ள பாக்ட்ரியாக்களை அழித்து பருக்கள் பிரச்சனையை சரி செய்ய உதவுகிறது.

கேரளா பெண்களின் ரகசியம் இது தானா.. செம்பருத்தி பூவை இப்படி பயன்படுத்துங்க முடி வளர்ச்சியை நிறுத்தவே முடியாது.. 

 

Rice Flour Face Pack:

Rice Flour Face Pack in tamil

ஒரு பவுலில் 1 தேக்கரண்டி அரிசி மாவு, 2 தேக்கரண்டி எலுமிச்சை சாறு, 1 தேக்கரண்டி தேன் சேர்த்து பேஸ்ட்டாக  மிக்ஸ் செய்து கொள்ளவும். இந்த பேக்கை முகத்தில் அப்ளை செய்து 15 நிமிடம் கழித்து முகத்தை கழுவ வேண்டும்.

அரிசி மாவை முகத்தில் பயன்படுத்துவதால் வயதான தோற்றம் ஏற்படாமல், முகத்தை பளபளப்பாக வைத்து கொள்ள உதவுகிறது. எலுமிச்சையில் சிட்ரிக் அமிலம் இருப்பதால் முகத்தில் உள்ள பருக்களை நீக்குவதற்கு உதவி செய்கிறது.

Orange Peel Face Pack:

Orange Peel Face Pack in tamil

ஆரஞ்சு தோலை சிறிதளவு எடுத்தது காய வைத்து பவுடராக அரைத்து கொள்ளவும். இதிலிருந்து 1 தேக்கரண்டி பவுலில் தனியாகஎடுத்து கொள்ளவும். இதனுடன் ரோஸ் வாட்டர் 2 தேக்கரண்டி சேர்த்து மிக்ஸ் செய்து கொள்ளவும். இந்த பேக்கை முகத்தில் தடவி 20 நிமிடம் வைத்திருந்து பிறகு முகத்தை கழுவ வேண்டும்.

ஆரஞ்சு தோல் முகத்தில் எண்ணெய் வழிவதை நிறுத்தி பருக்கள் வராமல் தடுக்கிறது. ரோஸ் வாட்டர் முகத்தில் உள்ள பள்ளங்களை குறைக்க உதவுகிறது. மேல் கூறப்பட்டுள்ள மூன்று பேக்கில் ஏதவாது ஒரு பேக்கை தொடர்ந்து அப்ளை செய்து வந்தாலே பருக்கள் குறைந்து விடும்.

2 நாட்களில் கரும்புள்ளிகள் மறைந்து முகம் அழகாக தோன்ற இந்த பேஸ் பேக்கை போடுங்க 

 

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil

 

Advertisement