முகம் வெள்ளையாக மாற கடலைமாவு
ஹலோ நண்பர்களே..! ஆண்களாக இருந்தாலும் சரி பெண்களாக இருந்தாலும் சரி முகம் எப்பொழுதும் அழகாக இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் ஆண்கள் அழகை பராமரிப்பதில் அந்தளவிற்கு ஆர்வம் செலுத்தமாட்டார்கள். ஆனால் பெண்கள் அப்படி இல்லை. அழகுக்கென்றே தனியாக ஒரு நேரத்தை செலவிடுவார்கள்.
அப்படி பெண்களுக்கு இருக்கும் ஆசைகளில் வெள்ளையாக மாற வேண்டும் என்பதும் ஓன்று. முகம் எப்பொழுதும் பளபளப்பாகவும் பொலிவுடனும் இருக்க வேண்டும் என்பதற்காக கடைகளில் கிடைக்கும் கெமிக்கல் சேர்க்கப்பட்ட கிரீம்களை வாங்கி பயன்படுத்துகிறார்கள். இப்படி செய்வதால் எந்த பயனும் இல்லை. அதனால் இன்றைய பதிவில் முகத்தை எப்பொழுதும் பளபளப்பாக வைத்திருக்கும் பேஸ் பேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl
Face Whitening At Home Naturally in Tamil:
- கடலை மாவு – 2 ஸ்பூன்
- காபி தூள் – 1 ஸ்பூன்
- தயிர் – 2 ஸ்பூன்
- எலுமிச்சை சாறு – 1 ஸ்பூன்
- ரோஸ் வாட்டர் – 1 ஸ்பூன்
வளர்ந்தது போதும் என்று நீங்களே சொல்லும் அளவிற்கு முடி வளர இந்த எண்ணெயை தடவுங்க |
பேஸ் பேக் செய்முறை:
முதலில் ஒரு கிண்ணத்தை எடுத்து கொள்ளவும். அதில் கடலை மாவு 2 ஸ்பூன் அல்லது உங்கள் முகத்திற்கு தேவையான அளவு எடுத்து கொள்ள வேண்டும். பின் அதில் காபி தூள் 1 ஸ்பூன் அளவிற்கு சேர்த்து கொள்ளுங்கள். அதேபோல தயிர் 2 ஸ்பூன், எலுமிச்சை சாறு 1 ஸ்பூன் மற்றும் ரோஸ் வாட்டர் 1 ஸ்பூன் சேர்த்து நன்றாக பேஸ்ட் போல கலந்து கொள்ள வேண்டும்.
அவ்வளவு தான் பேஸ் பேக் ரெடி. இதில் நாம் சேர்த்திருக்கும் அனைத்து பொருட்களும் இயற்கையான பொருட்கள் என்பதால் இது எந்தவொரு பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது. கடலை மாவு முகத்தில் இருக்கும் எண்ணெய் பசையை நீக்கி முகத்தை பளபளப்பாக வைத்து கொள்கிறது. தயிர் சருமத்திற்கு ஈரப்பதம் அளிக்கிறது. காபி தூள் மற்றும் எலுமிச்சை சாறு முக கருமையை போக்க உதவுகிறது.
வெயிலால் முகம் கருத்து விட்டதா.. அப்போ இதை ஒரு முறை ட்ரை செய்து பாருங்க |
பேஸ் பேக் அப்ளை செய்யும் முறை:
இந்த பேஸ் பேக்கை முகத்திற்கு அப்ளை செய்வதற்கு முன் உங்கள் முகத்தை குளிர்ந்த நீரால் கழுவி கொள்ளவும். பின் முகத்தை ஈரப்பதம் இல்லாமல் துடைத்து கொள்ளவும். அடுத்தபடியாக நாம் தயார் செய்து வைத்துள்ள பேஸ் பேக்கை முகத்திற்கு அப்ளை செய்ய வேண்டும்.
இந்த பேஸ் பேக் உங்கள் முகத்தில் குறைந்தது 25 நிமிடம் வரை அப்படியே இருக்க வேண்டும். பின் உங்கள் முகத்தை கழுவி கொள்ளலாம். இதுபோல வாரத்திற்கு 3 முறை செய்து வந்தால் உங்கள் முகம் பளபளப்பாக இருக்கும்.
கேரளா பெண்களின் ரகசியம் இது தானா.. செம்பருத்தி பூவை இப்படி பயன்படுத்துங்க முடி வளர்ச்சியை நிறுத்தவே முடியாது.. |
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |