முகம் வெள்ளி போல் மின்ன அரிசி மாவுடன் இதை மட்டும் கலந்து தடவி பாருங்க..!

Advertisement

முகம் வெள்ளி போல் மின்ன

ஆண்கள் பெண்கள் யாராக இருந்தாலும் முகம் அழகாக இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதிலும் பெண்களுக்கு கொஞ்சம் பேராசை அதிகம் தான். அழகுக்கென்ற அதிக நேரத்தை செலவிடுவார்கள். அதுபோல நம்மில் பலரும் முக அழகிற்காக கடைகளில் கிடைக்கும் கிரீம்களை வாங்கி பயன்படுத்துகிறோம். இப்படி பயன்படுத்துவதால் சருமத்தில் பல பாதிப்புகள் வருகிறது. அதிலும் பெண்கள் ஏதாவது Function செல்லவேண்டும் என்றால் உடனே பார்லருக்கு சென்று முகத்தை Facial செய்து வருகிறார்கள். இதெல்லாம் எதற்கு..? இப்படி செய்வதற்கு பதிலாக வீட்டில் இருக்கும் இயற்கையான பொருட்களை கொண்டு முகத்தை பளபளப்பாக மாற்றலாம். அந்த வகையில் இன்று முகம் வெள்ளி போல் மின்ன என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

முகம் வெள்ளி போல் மின்ன டிப்ஸ்:

rice flour with milk

  1. அரிசி மாவு – 2 ஸ்பூன்
  2. கோதுமை மாவு – 1 ஸ்பூன்
  3. பால் – தேவையான அளவு

முதலில் ஒரு கிண்ணத்தில் 2 ஸ்பூன் அளவிற்கு அரிசி மாவு எடுத்து கொள்ளுங்கள். பின் அதில் 1 ஸ்பூன் அளவிற்கு கோதுமை மாவு எடுத்து கொள்ளவும்.

பிறகு அதில் தேவையான அளவு பால் ஊற்றி பேஸ்ட் போல நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

முகம் தங்கம் போல் ஜொலிக்க கல்ல மாவுடன் இதை மட்டும் கலந்து தடவுங்க

 rice flour face pack for skin whitening

அரிசி மாவில் இருக்கும் சத்துக்கள் சருமத்தை சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்கிறது. கோதுமை மாவு சருமத்தில் இருக்கும் எண்ணெய் பசையை நீக்க உதவுகிறது. பால் முகத்தில் இருக்கும் கருமையை போக்கி முகத்தை பொலிவாக்குகிறது. 

இந்த பேஸ் பேக்கை உங்கள் முகத்தில் அப்ளை செய்வதற்கு முன், உங்கள் முகத்தை குளிர்ந்த நீரால் கழுவி கொள்ளுங்கள். பின் முகத்தில் அப்ளை செய்து நன்றாக மசாஜ் செய்யவும். இந்த பேக் முகத்தில் 20 நிமிடம் அப்படியே இருக்கட்டும்.

20 நிமிடம் கழித்து முகத்தை கழுவி கொள்ளலாம். இதுபோல வாரத்திற்கு 2 அல்லது 3 முறை செய்து வந்தால் முகம் வெண்மையாக மாறி வெள்ளி போல் மின்னும். மேலும் இந்த 3 பொருட்களுமே இயற்கையான பொருட்கள் என்பதால் இவை சருமத்திற்கு எந்த பாதிப்பையும் கொடுக்காது.

இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> இயற்கை அழகு குறிப்புகள்
Advertisement