முக சுருக்கங்களை நீக்க
பொதுவாக மனிதர்கள் அனைவரும் பிறக்க போது ஒரு மாதரி இருப்பார்கள், வளர வளர வேறு மாதிரி இருப்பார்கள். ஒவ்வொரு பருவத்திலும் ஒவ்வொரு விதமான அழகு கூடும். அதுவே வயதானால் நமது முகமே காட்டி விடும். அதவாது முக சுருக்கங்கள் காணப்படும். இதனை எப்படி சரி செய்வது என்று யோசிக்காமல் நாம் இப்படி இருக்கிறோம் என்று கவலைப்படுவார்கள். உங்களுடைய முகத்தில் சுருக்கம் வந்தால் உங்களுக்கு 25 வயதாக இருந்தாலும் 40 வயது போல் தான் இருக்கும். அதனால் தான் இந்த பதிவில் முகத்தில் உள்ள சுருக்கங்களை எப்படி சரி செய்வது என்று அறிந்து கொள்வோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
முக சுருக்கங்களை நீக்க கற்றாழை:
முதலில் வெள்ளரிக்காய் ஒன்றை எடுத்து சிறியதாக நறுக்கி கொள்ளவும் கொள்ளவும். பின் அதனை மிக்சி ஜாரில் சேர்த்து பேஸ்ட்டாக அரைத்து கொள்ளவும். இந்த பேஸ்ட்டை வடிக்கட்டியை பயன்படுத்தி வடிக்கட்டி சாற்றை மட்டும் எடுத்து கொள்ளவும்.
இந்த சாற்றிலிருந்து 3 தேக்கரண்டி எடுத்து கொள்ளவும், பின் இதில் 3 தேக்கரண்டி கற்றாழை ஜெல், ஆலிவ் ஆயில் 1 தேக்கரண்டி, பாதாம் ஆயில் 1 தேக்கரண்டி, தேங்காய் எண்ணெய் 1 தேக்கரண்டி சேர்த்து பேஸ்ட்டாக மிக்ஸ் செய்து கொள்ளவும்.
இந்த பேஸ்ட்டை முகத்தில் அப்பளை செய்து 1 மணி நேரம் வைத்திருந்து பிறகு முகத்தை கழுவ வேண்டும். இது போல் நீங்கள் வாரத்தில் செய்து வந்தால் முகத்தில் உள்ள சுருக்கங்கள் நீங்கி முகம் அழகாக காட்சியளிக்கும்.
முக சுருக்கங்களை நீக்க கேரட்:
கேரட்டை எடுத்து தோல் சீவி சிறியதாக நறுக்கி கொள்ளவும், அதன் பிறகு ஆரஞ்சு தோல் எடுத்து தோலை சீவி எடுத்து கொள்ளவும். இதனுடன் ஆலிவ் ஆயில் 1 தேக்கரண்டி, பிரியாணி இலை சிறிதளவு சேர்த்து கொள்ளவும். இதனை நீங்கள் Half Boil முறையில் கொதிக்க வைத்து எடுத்து கொள்ளவும்.
பிறகு நன்றாக கொதித்ததும், இதில் உள்ள சாற்றை தனியாக வடிக்கட்டி எடுத்து கொள்ளவும். அதில் உள்ள பொருட்களை பேஸ்ட்டாக அரைத்து கொள்ளவும்.
இந்த பேஸ்ட்டை முதலில் முகத்தில் அப்ளை செய்து 1/2 மணி நேரம் வைத்திருக்க வேண்டும். அதன் பிறகு சாற்றை முகத்தில் அப்பளை செய்து 1/ 2மணி நேரம் வைத்திருந்து முகத்தை கழுவ வேண்டும்.
மேல் கூறப்பட்டுள்ள இரண்டு குறிப்புகளில் எது உங்களுக்கு ஏற்றதாக இருக்கிறதோ அதனை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் ரிசல்ட்டை பெற முடியும்.
இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | இயற்கை அழகு குறிப்புகள் |