1 முடி கொட்டிய இடத்தில் 3 முடி வளரும்..! இந்த எண்ணெயை மட்டும் தடவி பாருங்க..!

Advertisement

1 முடி கொட்டிய இடத்தில் 3 முடி வளரும்

ஆண்கள் பெண்கள் அனைவருக்குமே முடி கொட்டாமல் வளர வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதிலும் பெண்களுக்கு முடி நீளமாகவும் அடர்த்தியாகவும் வளரவேண்டும் என்ற ஆசை அதிகமாகவே இருக்கும். இதற்காக கடைகளில் கிடைக்கும் எண்ணெய்கள் மற்றும் ஷாம்புகளை வாங்கி பயன்படுத்துகிறார்கள். இதனால் முடி அதிகமாக உதிர ஆரம்பிக்கும். மீண்டும் அதை சரி செய்வதற்கு வேறு எண்ணெயை வாங்கி பயன்படுத்துவோம். இப்படி செய்வதால் முடிக்கு அதிக பாதிப்புகள் வருகிறது. அதனால் தான் இந்த பதிவில் இன்று இயற்கையான பொருட்களை கொண்டு முடியை நீளமாகவும் அடர்த்தியாகவும் வளர செய்யும் எண்ணெய் செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

இயற்கை பொருட்கள் போதும் முடி நீளமாக வளர: 

இயற்கை பொருட்கள் போதும் முடி நீளமாக வளர

  1. தேங்காய் எண்ணெய்
  2. சின்ன வெங்காயம் – 10
  3. நெல்லிக்காய்
  4. செம்பருத்தி இலை
  5. கருவேப்பிலை
  6. வேப்பிலை
  7. மருதாணி இலை
  8. செம்பருத்தி பூ
  9. துளசி
  10. வெந்தயம்
  11. கருஞ்சீரகம்
  12. கிராம்பு
  13. அருகம்புல்

11 மூலிகை கொண்ட ஹெர்பல் ஹேர் ஆயில் வீட்டிலேயே செய்யும் முறை

எண்ணெய் செய்முறை: 

இயற்கை பொருட்கள் போதும் முடி நீளமாக வளர

முதலில் கடாயை அடுப்பில் வைத்து கொள்ளுங்கள். பின் அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும்.

அடுத்து அதில் வெந்தயம் கருஞ்சீரகத்தை தூளாக இடித்து போட்டு கொள்ளுங்கள். பின் அதில் நெல்லிக்காய் சின்ன வெங்காயம் இரண்டையும் நன்றாக நசுக்கி போட்டுக்கொள்ளவும்.

நன்றாக கொதித்ததும் அதில் செம்பருத்தி இலை, வேப்பிலை, துளசி, அருகம்புல், மருதாணி இலை மற்றும் கிராம்பு இவை அனைத்தையும் போட்டு கொதிக்க விடவும்.

கடைசியாக கருவேப்பிலையை போட்டு நன்றாக கொதிக்க விட வேண்டும். எல்லா பொருட்களின் நிறம் மாறியதும் அடுப்பில் இருந்து இறக்கி ஆறவிட வேண்டும்.

எண்ணெய் ஆறியதும் அதை வடிகட்டி ஒரு பாட்டிலில் ஸ்டோர் செய்து வைத்து கொள்ளுங்கள்.

பயன்படுத்தும் முறை: 

இந்த எண்ணெயை தினமும் உங்கள் முடியின் வேர்ப் பகுதியில் இருந்து முடியின் அடிப்பகுதி வரை நன்றாக தடவ வேண்டும். இதுபோல தொடர்ந்து தடவி வந்தால் 1 மாதத்தில் கொட்டிய முடி அனைத்தும் மீண்டும் வளர்ந்துவிடும்.

உங்களுடைய வயதை 10 வருடம் குறைத்து காட்ட வேண்டுமா

இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> இயற்கை அழகு குறிப்புகள்
Advertisement