Fast Hair Growth Serum in Tamil
பொதுவாக ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி தங்களின் தலை முடியை நன்கு பாதுகாத்து வைத்து கொள்ள வேண்டும் என்று தான் சிந்தனை செய்வார்கள். அதிலும் குறிப்பாக பெண்கள் தங்களின் தலைமுடி மிகவும் அடர்த்தியாகவும் நீளமாகவும் வளர வேண்டும் என்று சிந்தனை செய்வார்கள். அதற்காக அவர்களும் பல வகையான ஷாம்பு மற்றும் ஹேர் சீரம் போன்றவற்றை வாங்கி பயன்படுத்துவார்கள்.
ஆனால் அவையாவும் நல்ல பலனை அளித்ததா என்றால் அவர்களின் பதில் இல்லையென்றே இருக்கும். அதனால் தான் உங்களுக்கு உதவும் நோக்கத்தில் இன்றைய பதிவில் இயற்கையான முறையில் வீட்டிலேயே உங்கள் தலை முடியின் வளர்ச்சியை அதிகரிக்க உதவும் சீரம் ஒன்றினை எப்படி தயாரிப்பது என்பதை பற்றி தான் அறிந்து கொள்ள இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள முறையில் அந்த சீரத்தை தயாரித்து பயன்படுத்தி உங்களின் தலை முடியின் வளர்ச்சியை அதிகரித்து கொள்ளுங்கள்..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
Natural Hair Growth Serum in Tamil:
இயற்கையான முறையில் வீட்டிலேயே உங்கள் தலை முடியின் வளர்ச்சியை அதிகரிக்க உதவும் சீரம் ஒன்றினை எப்படி தயாரிப்பது என்பதை பற்றி இங்கு காணலாம் வாங்க.
அதற்கு முன்னால் இதற்கு தேவையான பொருட்களை பற்றி விரிவாக தெரிந்து கொள்ளுங்கள்.
- அரிசி – 1 கப்
- ஆளிவிதை – 1 டேபிள் ஸ்பூன்
- செம்பருத்தி இலை – 1 கைப்பிடி அளவு
- செம்பருத்தி பூ – 5
- கற்றாழை ஜெல் – 1 டேபிள் ஸ்பூன்
- விளக்கெண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
உதிர்ந்த இடத்திலேயும் புதிய முடியை வளர வைக்க பச்சைபயிர் மட்டும் போதும்
கிண்ணத்தை எடுத்து கொள்ளவும்:
முதலில் ஒரு கிண்ணத்தை எடுத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 1 கப் அரிசியை சேர்த்து அது நன்கு ஊறுவதற்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 2 மணி நேரம் நன்கு ஊறவிடுங்கள்.
அடுப்பில் பாத்திரத்தை வைக்கவும்:
பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் நாம் ஊற வைத்திருந்த அரிசியை தண்ணீருடன் சேர்த்து நன்கு கொதிக்க விடுங்கள்.
கோடைக்காலத்தில் உங்களின் முகம் முதல் பாதம் வரை நிலவு போல் வெள்ளையாக மாற இந்த ஒரு பொடி போதும்
ஆளிவிதையை சேர்த்து கொள்ளவும்:
பிறகு அதனுடன் நாம் எடுத்து வைத்துள்ள 1 டேபிள் ஸ்பூன் ஆளிவிதையையும் சேர்த்து நன்கு கொதிக்க விடுங்கள்.
செம்பருத்தி இலை மற்றும் பூவை சேர்க்கவும்:
அதனுடனே நாம் எடுத்து வைத்துள்ள 1 கைப்பிடி அளவு செம்பருத்தி இலை மற்றும் 5 செம்பருத்தி பூவையும் சேர்த்து நன்கு கொதிக்க விடுங்கள். பின்னர் அதனை ஒரு கிண்ணத்தை வடிக்கட்டி கொள்ளுங்கள்.
கற்றாழை ஜெல்லினை கலந்து கொள்ளவும்:
அடுத்து அதனுடன் 1 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல்லினை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.
விளக்கெண்ணெயை கலக்கவும்:
இறுதியாக அதனுடன் 1 டேபிள் ஸ்பூன் விளக்கெண்ணெயை கலந்து கொள்ளுங்கள். பிறகு இதனை 1 நாள் இரவு முழுவதும் ஒரு மூடி போட்ட கண்ணாடி பாத்திரத்தில் எடுத்து வைத்து கொள்ளுங்கள்.
பின்னர் இதனை உங்கள் தலை முடியின் வேரில் படுமாறு தடவி 15 முதல் 20 நிமிடங்கள் நன்கு மசாஜ் செய்து கொள்ளுங்கள். பிறகு தலைக்கு குளியுங்கள். இதனை வாரம் இரு முறை அல்லது மூன்று முறை என தொடர்ந்து செய்து வருவதன் மூலம் உங்களின் தலைமுடி நன்கு நீளமாகவும், அடர்த்தியாகவும் வளர ஆரம்பிப்பதை நீங்களே காணலாம்.
இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | இயற்கை அழகு குறிப்புகள் |