சொட்டை தலையிலும் 3 மடங்கு வேகமாக மூடி வளர வைக்க வெங்காயம் மட்டும் போதும்..!

Advertisement

Faster Hair Growth Tips Naturally in Tamil

பொதுவாக இந்த உலகில் மனிதனாக பிறந்த அனைவருக்கும் தங்களை மற்றவர்களின் பார்வையில் அழகா பராமரித்து கொள்ள வேண்டும் என்ற ஆசையும் ஆர்வமும் இருக்கும். அதிலும் குறிப்பாக குறிப்பாக பெண்களுக்கு தங்களை பார்த்து என்றாவது ஒருவரவது நீங்கள் மிகவும் அழகா இருக்கின்றிர்கள் என்று கூறவில்லை என்றால் அன்றைய நாள் அவர்களுக்கு நிம்மதியாக தூக்கமே வராது. பொதுவாக நமது அழகினை முதலில் மற்றவர்களுக்கு காட்டுவது நமது முகமும் தலைமுடியும் தான். அதனால் நமது தலைமுடியில் ஏதாவது ஒரு சிறிய பிரச்சனை என்றாலும் நமது மனம் மிக மிக வருத்தப்படும். அதிலும் நமது தலைமுடி அதிக அளவு உதிர்ந்து உதிர்ந்த இடத்தில் முடி வளரவில்லை என்றால் அவ்வளவு தான். அதனை சரிசெய்வதற்காக நாம் பலவகையான முயற்சிகளை மேற்கொள்வோம். ஆனால் அவையாவும் நல்ல பலனை அளித்திருக்காது. எனவே தான் இயற்கையான முறையில் உதிர்ந்த இடத்தில் எல்லாம் புதிய முடியை வளர வைக்க உதவும் ஒரு குறிப்பினை பற்றி இன்றைய பதிவில் காண்போம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Fast Hair Growth Home Remedies in Tamil:

Fast Hair Growth Home Remedies in Tamil

இயற்கையான முறையில் உதிர்ந்த இடத்தில் எல்லாம் புதிய முடியை வளர வைக்க உதவும் ஒரு குறிப்பினை பற்றி விரிவாக இங்கு காணலாம் வாங்க.

குறிப்பின் செய்முறையை அறிந்து கொள்வதற்கு முன்னால் இந்த குறிப்பிற்கு என்னென்ன பொருட்கள் தேவை என்பதை பார்க்கலாம்.

  1. சின்ன வெங்காயம் – 15
  2. வெந்தயம் – 2 டேபிள் ஸ்பூன் 
  3. கருவேப்பிலை – 1 கைப்பிடி அளவு 
  4. செம்பருத்தி இழை – 1 கைப்பிடி அளவு
  5. செம்பருத்தி பூ – 3
  6. ரோஸ்மேரி இழை – 2 கொத்து 
  7. தண்ணீர் – தேவையான அளவு 
  8. ஸ்ப்ரே பாட்டில் – 1

நரை முடி கருப்பாக வேண்டுமா அப்போ தேங்காய் எண்ணெயில் இதை கலந்து தடவுங்க போதும்

கடாயை எடுத்து கொள்ளவும்:

முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள தேவையான அளவு தண்ணீரை ஊற்றி அதில் 15 சின்ன வெங்காயம், 2 டேபிள் ஸ்பூன் வெந்தயம், 1 கைப்பிடி அளவு கருவேப்பிலை மற்றும் 1 கைப்பிடி அளவு செம்பருத்தி இழை ஆகியவற்றை சேர்த்து நன்கு கொதிக்கவிடுங்கள்.

செம்பருத்தி பூவினை சேர்க்கவும்:

அதனுடன் நாம் எடுத்து வைத்துள்ள 3 செம்பருத்தி பூக்களையும் சேர்த்து நன்கு கொதிக்க விடுங்கள்.

முகத்தை எப்பொழுதும் பளபளப்பாக வைத்திருக்க இந்த இரண்டு பொருட்களை இப்படி பயன்படுத்துங்க போதும்

ரோஸ்மேரி இழையை சேர்த்து கொள்ளவும்:

இறுதியாக அதில் நாம் எடுத்து வைத்துள்ள 2 கொத்து ரோஸ்மேரி இழையையும் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து ஒரு கிண்ணத்தில் வடிகட்டி வைத்து கொள்ளுங்கள்.

பயன்படுத்தும் முறை:

பிறகு அது நன்கு குளிர்ந்தவுடன் நாம் எடுத்து வைத்துள்ள ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி உங்களின் தலைமுடியின் வேர்களில் படுமாறு ஸ்ப்ரே செய்து 10 நிமிடங்களுக்கு நன்கு மசாஜி செய்து கொள்ளுங்கள்.

பிறகு தலைக்கு குளியுங்கள். இதனை வாரம் இருமுறை அல்லது மூன்று முறை என தொடர்ந்து செய்தால் 1 மாதத்திலேயே நன்கு முடி வளர ஆரம்பிப்பதை நீங்களே காணலாம்.

கண்களை சுற்றியுள்ள கருவளையம் இருந்த இடம் தெரியாமல் போக காபி தூளை இப்படி பயன்படுத்துங்க போதும்

இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> இயற்கை அழகு குறிப்புகள்
Advertisement