நீங்களே நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு முடி வளர வெந்தயத்துடன் இந்த ஒரு பொருளை கலந்து போட்டால் போதும்..

Advertisement

வெந்தயம் முடி வளர

பெண்களுக்கு முடிதான் அழகு. பெண்களுக்கு முடி அதிகமாக  வளர வேண்டும் தான் ஆசைப்படுகின்றனர. முடி நீளமாக வளர நிறைய எளிமையான வீட்டு வைத்தியங்கள் இருக்கிறது. இதற்காக கடையில் விற்கும் எண்ணெய்களையும், ஷாம்புகளையும் பயன்படுத்துகின்றனர். இதன்மூலம் முடிகள் வளர ஆரமித்தாலும் நாளடைவில் முடி உதிர்வு பிரச்சனை ஏற்படும். அதனால் முடி வளர்ச்சிக்காக இயற்கையான முறையை தேர்ந்தெடுப்பது அவசியமானது. அதனால் இந்த பதிவில் வெந்தயத்தை வைத்து எப்படி முடி வளர வைப்பது என்று தெரிந்து கொள்வோம் வாங்க..

Fenugreek Uses For Hair Growth:

முடி அடர்த்தியாக வளர வெந்தயம்

முதலில் ஒரு பவுலில் தேவையான அளவு வெந்தயத்தை எடுத்து முதல் நாள் இரவே  ஊற வைத்து கொள்ளவும்.

மறுநாள் காலையில் இன்னொரு பவுலில் கற்றாழை ஜெல் எடுத்து கொள்ளவும். இந்த ஜெல்லில் ஊற வைத்த வெந்தய தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து மிக்ஸ் செய்து  கொள்ளவும்.

இந்த வெந்தய தண்ணீரை குளிப்பதற்கு முன் தலை முடி முழுவதும் அப்ளை செய்து 30 நிமிடம் கழித்து தலை தேய்த்து குளிக்கவும். இந்த பேக்கை அப்ளை செய்வதால் தலை முடி நீளமாக வளரும், வெள்ளை முடி ஏற்படாது. மேலும் தலை முடி பளபளப்பாக இருக்கும்.

நமக்கு எப்போ இவ்ளோ முடி வளர்ந்திச்சின்னு நீங்களே ஆச்சர்யப்படுவீங்க.. அதற்கு இந்த எண்ணெயை தடவுங்க

வெந்தயம் மற்றும் கருவேப்பிலை:

முடி அடர்த்தியாக வளர வெந்தயம்

அடுப்பில் இரும்பு கடாய் வைத்து கொள்ளவும், அதில் 100 தேங்காய் எண்ணெய் ஊற்ற கொள்ளவும். பின் அதில் தேவையான அளவு வெந்தயத்தை சேர்த்து கொள்ளவும். பிறகு கருவேப்பிலை சேர்த்து கொதிக்க விடவும். எண்ணெயின் நிறம் மாறியதும் அடுப்பிலிருந்து இறக்கி விடவும். எண்ணெய் ஆறியதும் ஒரு பாட்டிலில் ஸ்டோர் செய்து வைத்து கொள்ளவும். இந்த எண்ணெயை தினமும் தலைக்கு தேய்த்து வர வேண்டும்.

 கருவேப்பிலையில் பீட்டா கரோட்டின் இருப்பதால் முடி உதிர்வு நின்று முடி வேகமாக வளருவதற்கு உதவுகிறது.  

வெந்தயம்:

வெந்தயம் தேவையான அளவு எடுத்து முதல் நாள் இரவே ஊற வைத்து கொள்ளவும். மறுநாள் காலையில் ஊற வைத்த வெந்தயத்தை பேஸ்ட்டாக அரைத்து கொள்ளவும். இந்த பேக்கை தலையில் தேய்த்து 20 நிமிடம் கழித்து தலை தேய்த்து குளிக்கவும். இந்த முறையை வாரத்தில் ஒரு நாள் என்று தொடர்ந்து செய்து வந்தால் தலை முடி வளர்வதை நீங்களே காணலாம்.

👉1 இன்ச் கூட வளராமல் முடி அப்படியே இருக்கா.. அப்போ வெந்தயத்தை இப்படி அப்ளை செய்தால் போதும்

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil
Advertisement