Foods For Healthy And Glowing Skin in Tamil
பொதுவாக நாம் அனைவருமே முகத்தை வெள்ளையாகவும் அழகாகவும் வைத்து கொள்ள பல விதமான க்ரீம்களை பயன்படுத்துவோமே தவிர, இயற்கையாகவே முகம் ஆரோக்கியமாகவும் பளபளப்பாகவும் இருக்க என்ன செய்வது என்பதை பற்றி யோசிப்பதில்லை. முகத்திற்கு ஏதாவதொரு க்ரீமினை பயன்படுத்தி வருகிறீர்கள் என்றால் தொடர்ந்து பயந்தபுத்தி கொண்டே இருக்க வேண்டும். அப்படி இல்லையென்றால், முகத்திற்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். ஆனால், இயற்கையாக நாம் சாப்பிடும் உணவுகள் அப்படி இல்லை. நம் சருமத்திற்கு எந்தவொரு பாதிப்புகளையும் ஏற்படுத்தாது. அப்படி இருக்கும் பட்சத்தில் நமக்கு எது நன்மை அளிக்கிறதோ அதனை தான் நாம் முயற்சிக்க வேண்டும். எனவே, முகம் பளப்பளப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க சில உணவுகளை நாம் கட்டாயம் சாப்பிட வேண்டும்.
எனவே, நீங்கள் க்ரீம் வாங்குவதற்கு பதிலாக இந்த உணவுகளை வாங்கி சாப்பிடுவதன் மூலம் நல்ல பலன்களை பெறலாம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
What are The Foods for Healthy and Glowing Skin in Tamil:
தக்காளி:
தக்காளியில் உள்ள வைட்டமின் சி, லைகோபீன், கரோட்டினாய்டுகள் போன்றவை சூரிய ஒளியில் இருந்து சருமத்தை பாதுகாக்க உதவுகிறது. அதுமட்டுமில்லாமல் இதில் உள்ள பீட்டா கரோட்டின் சருமத்தின் முதுமை தோற்றத்தை குறைக்கிறது. குறிப்பாக தக்காளியில் உள்ள கரோட்டினாய்டுகள் சருமத்தை பளபளப்பாக வைத்து கொள்ள உதவுகிறது.
உலர் பழங்கள்:
உலர் பழங்கள் என்று சொல்லக்கூடிய பாதாம் பருப்பு, அக்ரூட் பருப்புகள், உலர் திராட்சைகள் மற்றும் பிஸ்தா போன்ற பருப்பு வகைகளில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உள்ளது. இது, சருமத்திற்கு பளபளப்பையும் ஆரோக்கியத்தையும் தருகிறது.
எண்ணெய் வழியும் முகத்தை கூட பளபளப்பாக மாற்றலாம்..
கேரட்:
கேரட், வைட்டமின் ஏ மற்றும் பீட்டா கரோட்டின் நிறைந்த உணவு பொருளாகும். இது சருமத்திற்கு பளபளப்பினை அளிக்கிறது. அதுமட்டுமில்லாமல், இது முக பருக்கள் ஏற்படுவதையும் தடுக்கிறது. மேலும், தோலின் முதுமை தோற்றத்தையும் குறைக்கிறது.
முட்டை:
முட்டை நம் உடலிற்கு மட்டும் நன்மை அளிப்பதோடு சருமத்திற்கும் நன்மை அளிக்கிறது. முட்டையில் புரதம், வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் நிறைந்துள்ளது. இது சருமத்தை மென்மையாகவும், தழும்புகள் இல்லாமலும் வைத்து கொள்கிறது. மேலும், முட்டையின் மஞ்சள் கருவில் கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளது. இது, சருமத்திற்கு ஈரப்பதத்தினை அளித்து சருமத்தை இளமையாகவும், பொலிவாகவும் வைத்து கொள்கிறது.
இதை மட்டும் செய்திர்கள் என்றால் நீங்களே ஆச்சிரியபடுகிற அளவுக்கு முகம் பளபளப்பாக மாறும்..!
தண்ணீர்:
நமது உடலின் ஊட்டச்சத்திற்கு அடிப்படையாக விளங்குவது தண்ணீர். ஒரு நாளைக்கு 8 முதல் 10 கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும். அப்பொழுது தான் சருமத்திற்கு தேவையான ஈரப்பதம் கிடைத்து சருமம் ஆரோக்கியமாக இருக்கும். குறிப்பாக முகப்பரு போன்ற சரும பிரச்சனைகள் வராமல் இருக்கும்.
இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | இயற்கை அழகு குறிப்புகள் |