Foods to Eat For Glowing Skin
முகம் ஆனது எப்போதும் பளிச்சென்றும், அழகாகவும் இருக்க வேண்டும் என்பது மனிதனாக பிறந்தவரின் ஆசைகளில் ஒன்றாக உள்ளது. ஆனால் முகம் நம்முடைய பருவநிலை வயதிற்கு ஏற்றவாறு மாறிக்கொண்டே தான் போகும். அதேபோல் ஒவ்வொரு மாற்றத்தின் போது நமக்கு பருக்கள் வருதல், கரும்புள்ளி வருதல் போன்ற சில அறிகுறிகளும் தோன்றும். அந்த வகையில் பார்த்தோம் என்றால் ஒரு சிலருக்கு முகம் ஆனது எப்போதும் பொலிவுடனும் அழகாகவும் இருக்கும். இதற்கான காரணம் என்னவென்று நாம் அவர்களிடம் கேட்டால் அதற்கான பதிலை அவர்கள் கூற மாட்டார்கள். இனி நீங்கள் இதுமாதிரி டிப்ஸினை பற்றி யாரிடமும் கேட்க வேண்டாம். ஏனென்றால் முகம் எப்போதும் பொலிவுடன் அழகாக இருப்பதற்கு கிரீம் எதுவும் அப்ளை செய்யாமல் எந்த மாதிரியான உணவுகளை சாப்பிட வேண்டும் என்று தான் இன்றைய பதிவில் பார்க்போகிறோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
முகம் பொலிவு பெற என்ன சாப்பிட வேண்டும்:
1. தயிர்:
தயிரில் வைட்டமின் B, லாக்டிக் அமிலம் மற்றும் துத்தநாகம் போன்ற பல சத்துக்கள் அடங்கியுள்ளது. அதனால் நம்முடைய அன்றாட வாழ்க்கையில் தினமும் 1 கப் தயிரனை எடுத்துக்கொள்வதன் மூலம் முகம் பளபளப்பு பெறுவதை நாம் உணர முடியும்.
2. மாதுளை பழம்:
மாதுளைப்பழம் ஆனது நமது உடலின் இரத்தத்தை அதிகரிக்க வைப்பதற்கு சிறந்த ஒன்றாக உள்ளது. அதனால் பெண்களும், கர்ப்பிணி தாய்மார்களும் தான் இதை அதிகமாக சாப்பிட்டு வருகிறார்கள்.
ஆனால் தினசரி நாம் மாதுளைப்பழம் எடுத்துக்கொள்வதன் மூலம் நம்முடைய உடல் ஆனது வலிமை பெறுவதோடு மட்டும் இல்லாமல் முகத்தில் ஏற்படும் தோல் சுருக்கத்தினையும் போக்கி வயதினை தோற்றத்தை வராமல் தடுக்க உதவுகிறது.
Life style👇👇 நரைமுடி பிரச்சனை வாழ்நாள் முழுவதும் வராமல் இருக்க இதை செய்யுங்க |
3. மஞ்சள் பால் குடிப்பது:
நாம் குடிக்கும் சாதாரணமான பாலை விட மஞ்சள் பாலில் தான் எண்ணற்ற சத்துக்கள் அடங்கியுள்ளது. இந்த மஞ்சள் பாலை குடிப்பதனால் சளி, இருமல் நீங்குவதோடு முகத்தையும் நன்றாக அழகாகவும், பளிச்சென்றும் வைக்க உதவுகிறது.
4. நீர் சத்து உள்ள உணவுகள்:
சருமத்தில் ஈரப்பதம் அல்லது நீர்ச்சத்து இல்லை என்றால் முகப்பருக்கள் மற்றும் தில் சுருக்கம் போன்ற பிரச்சனைகள் வரும். அதனால் முகத்தில் ஈரப்பதத்தை தக்க வைத்துக் கொள்ள அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும்.
மேலும் நீர்சத்து சத்து அதிகம் உள்ள வெள்ளரிக்காய் போன்ற காய் மற்றும் பழங்களை எடுத்துக்கொள்ள வேண்டும்.
5. பழங்கள் சாப்பிடுதல்:
முகத்தை என்றும் பளபளப்பாகவும், அழகாவும் வைத்துக் கொள்ள வேண்டும் என்றால் நாம் அதிகமாக கிரீம் வகைகளை தான் உபயோகப்படுத்துவோம். ஆனால் இவ்வாறு எதுவுமே செய்யாமல் முகத்தில் பளிசென்று வைக்க முடியும்.
அதாவது நாம் அதிகமாக பழங்ளை தினமும் சாப்பிடுவதன் மூலம் முகத்தில் தேவையான ஊட்டச்சத்துக்களும், வைட்டமின்களும் கிடைத்து இயற்கையான முகப் பளபளப்பை பெறலாம்.
Life style👇👇 கருத்து போன முகத்திற்கு இதை மட்டும் போட்டு பாருங்க.. 10 நிமிடத்தில் முகம் செம பிரைட்டா ஆகிடும்
இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | இயற்கை அழகு குறிப்புகள் |