கோடைக்காலத்தில் உங்களின் முகம் முதல் பாதம் வரை நிலவு போல் வெள்ளையாக மாற இந்த ஒரு பொடி போதும்..!

Advertisement

Full Body Whitening Bath Powder at Home in Tamil

பொதுவாக கோடைக்காலம் வந்து விட்டாலே வெப்பம் மற்றும் மாசுபாட்டின் காரணமாக உங்களின் முகம் மட்டுமில்லாமல் உங்களின் உடல் முழுவதும் பொலிவிழந்து காணப்படும். அதனால் அதனை சரி செய்வதற்காக நீங்களும் கடைகளில் விற்கப்படும் பல கெமிக்கல் கலக்கப்பட்ட சோப்பு மற்றும் குளியல் பொடிகளை வாங்கி பயன்படுத்துவீர்கள்.

அப்படி பயன்படுத்துவதால் உங்களின் உடலுக்கு பல வகையான தீமைகளே வந்து சேரும். அதனால் தான் இன்றைய பதிவில் உங்கள் வீட்டில் உள்ள சில பொருட்களை பயன்படுத்தி இயற்கையான முறையில் ஒரு குளியல் பொடியை தயாரிப்பது எப்படி என்று பதிவிட்டுள்ளோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து அந்த குளியல் பொடியை தயாரிப்பது எப்படி என்பதை அறிந்து கொண்டு அதனை தயாரித்து பயன்படுத்தி பயன் பெறுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Homemade Bath Powder for Skin Whitening in Tamil:

Homemade Bath Powder for Skin Whitening in Tamil

உங்கள் வீட்டில் உள்ள சில பொருட்களை பயன்படுத்தி இயற்கையான முறையில் ஒரு குளியல் பொடியை தயாரிப்பது எப்படி என்பதை பற்றி இங்கு காணலாம். அதற்கு முன்னால் இந்த குளியல் பொடி தயாரிக்க தேவையான பொருட்களை பார்க்கலாம்.

  1. ஆரஞ்சு பழத்தோல் – 2 கைப்பிடி அளவு 
  2. ஓட்ஸ் – 2 கைப்பிடி அளவு 
  3. பன்னீர் ரோஜா இதழ்கள் – 2 கைப்பிடி அளவு 
  4. பாதாம் – 20 
  5. பாசிப்பயிர் – 2 கைப்பிடி அளவு 
  6. ஆவாரம்பூ பொடி – 4 டேபிள் ஸ்பூன் 
  7. மஞ்சள் தூள் – 4 டேபிள் ஸ்பூன் 
  8. கடலை மாவு – 4 டேபிள் ஸ்பூன்

10 நிமிடத்தில் உங்களின் முகம் பொலிவு பெற பாலுடன் இந்த ஒரு பொருளை மட்டும் சேர்த்து பயன்படுத்துங்க போதும்

அனைத்து பொருட்களையும் காய வைத்து கொள்ளவும்:

முதலில் நாம் எடுத்து வைத்துள்ள 2 கைப்பிடி அளவு ஆரஞ்சு பழத்தோல், 2 கைப்பிடி அளவு ஓட்ஸ், 2 கைப்பிடி அளவு பன்னீர் ரோஜா இதழ்கள், 2 கைப்பிடி அளவு பாசிப்பயிர் மற்றும் 20 பாதாம் ஆகியவற்றை 2 முதல் 3 நாட்கள் வரை நன்கு வெயிலில் காய வைத்து எடுத்து கொள்ளுங்கள்.

பின்னர் இவை அனைத்தையும் ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து நன்கு பொடியாக அரைத்து ஒரு கிண்ணத்தில் கொட்டி கொள்ளுங்கள்.

ஆவாரம்பூ பொடியை சேர்க்கவும்:

பின்னர் அதனுடன் நாம் எடுத்து வைத்துள்ள 4 டேபிள் ஸ்பூன் ஆவாரம்பூ பொடியை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.

30 நிமிடத்தில் உங்க முகம் பொலிவு பெற பாதாமை இப்படி பயன்படுத்துங்க போதும்

மஞ்சள் தூளை கலக்கவும்:

அதனுடனே நாம் எடுத்து வைத்துள்ள 4 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூளையும் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.

கடலை மாவினை கலந்து கொள்ளவும்:

இறுதியாக அதனுடன் நாம் எடுத்து வைத்துள்ள 4 டேபிள் ஸ்பூன் கடலை மாவினையும் சேர்த்து நன்கு கலந்து ஒரு மூடி போட்ட கண்ணாடி பாத்திரத்தில் கொட்டி வைத்து கொள்ளுங்கள்.

பின்னர் இந்த பொடியில் இருந்து 2 முதல் 3 டீஸ்பூன் எடுத்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு பசை போல் செய்து உங்கள் உடல் முழுவதும் பூசி கொண்டு குளியுங்கள்.

இந்த குளியல் பொடியை நீங்கள் தினமும் பயன்படுத்துவதன் மூலம் உங்களின் முகம் மட்டுமில்லாமல் உடல் முழுவதும் நன்கு பொலிவு பெரும்.

உதிர்ந்த இடத்திலேயும் புதிய முடியை வளர வைக்க பச்சைபயிர் மட்டும் போதும் 

இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> இயற்கை அழகு குறிப்புகள் 

 

 

Advertisement