காலில் உள்ள கருமை நிறம் நீங்க தேங்காய் எண்ணெயுடன் இந்த ஒரு பொருளை மட்டும் கலந்து போடுங்க..!

Get Rid of Dark Spots on Legs Naturally in Tamil

Get Rid of Dark Spots on Legs Naturally in Tamil

அனைவரும் முகத்தை தான் பார்த்து பார்த்து அழகு படுத்துகிறோம். முகம் வெண்மையாக இருப்பதற்காக பல பொருட்களை பயன்படுத்தி வருவோம். ஆனால் முகத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை கால்களுக்கும், கைகளுக்கும் கொடுப்பதில்லை. பலபேருக்கு முகம் மட்டும் வெண்மையாக இருக்கும் ஆனால் கால்கள் அதற்கு எதிர்மறையாக இருக்கும். முகம் வெண்மையாக இருந்து கால்கள் மட்டும் கருப்பாக இருந்தால் அது பார்ப்பதற்கு அழகாக இருக்காது. இதனை சரிசெய்ய பல பெண்கள் பார்லருக்கு செல்வார்கள். ஆனால் வீட்டில் பயன்படுத்தும் பொருட்களை மட்டும் பயன்படுத்தி காலில் உள்ள கருமையை எளிதில் போக்கலாம். அதற்கான விவரங்களை தான் இப்பதிவில் பின்வருமாறு விவரித்துளோம். எனவே இப்பதிவை முழுவதுமாக படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

How To Get Rid of Dark Spots on Legs Home Remedies in Tamil:

 how to get rid of dark spots on legs home remedies in tamil

தேவையான பொருட்கள்:

  • எலுமிச்சை சாறு- 3 ஸ்பூன்
  • தேங்காய் எண்ணெய்- 1/2 ஸ்பூன்
  • பேக்கிங் சோடா- 1 டீஸ்பூன்

How to Get Rid of Dark Spots on Legs Naturally:

கிண்ணத்தை எடுத்து கொள்ளவும்:

முதலில் ஒரு சுத்தமான கிண்ணத்தை எடுத்து கொள்ளுங்கள். அதில் தேங்காய் எண்ணெய் சேர்த்து கொள்ளுங்கள்.

 how to get rid of dark spots on legs at home in tamil

எலுமிச்சை சாறு சேர்க்கவும்:

பிறகு இதனுடன் எலுமிச்சை சாறு மற்றும் பேக்கிங் சோடா சேர்த்து நன்றாக கலந்து விடவும்.

 காலில் உள்ள கருமை நீங்க

கருத்து போன முகத்திற்கு இதை மட்டும் போட்டு பாருங்க.. 10 நிமிடத்தில் முகம் செம பிரைட்டா ஆகிடும்.

அப்ளை செய்யும் முறை:

முதலில் காலில் அழுக்கு இல்லாமல் சுத்தம் செய்து கொள்ளுங்கள். பிறகு ஒரு காட்டன் துணியை பயன்படுத்தி காலை நன்றாக துடைத்து கொள்ளுங்கள்.

பிறகு, தயார் செய்து வைத்துள்ள கலவையை ஒரு சிறிய காட்டன் துணி அல்லது ஸ்பூன் பயன்படுத்தி காலில் கருமை உள்ள  இடங்களில் அப்ளை செய்து தேய்த்து விடுங்கள்.

 how to get rid of dark spots on legs home remedies in tamil

காலில் நன்றாக அப்ளை செய்த பிறகு, 4 அல்லது 5 நிடங்கள் உலர விட்டு தண்ணீர் கொண்டு கழுவி விடுங்கள்.

இவ்வாறு நீங்கள் வாரத்திற்கு ஒருமுறை மட்டும் பயன்படுத்தி வருவதன் மூலம் காலில் உள்ள கருமையை எளிதில் நீக்கிவிடலாம்.

பொடுகு பிரச்சனையை நிரந்தரமாக சரி செய்ய இந்த எண்ணெயை மட்டும் பயன்படுத்துங்க..

குறிப்பு:

இதனை நீங்கள் அடிக்கடி பயன்படுத்த கூடாது. வாரத்திற்கு ஒருமுறை பயன்படுத்துவது நல்லது. மேலும் இதனை முகத்திற்கு பயன்படுத்துதல் கூடாது.

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil